செவ்வாய், 16 ஜூன், 2015

பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.பனசங்கரி – சாகம்பரி. 

பெங்களூருவில் வனசங்கரி என்று சொல்வதைத்தான் கன்னடத்தில் பனசங்கரி என்று சொல்கிறார்கள். (திலகாரண்யா என்ற வனம் சூழ்ந்த சோலையில் பாதாமி என்ற இடத்தில் புராண சாகம்பரி கோயில் இருக்கிறது. )

சென்ற வருடம் கணவருடன் சென்று பெங்களூரு பனசங்கரியைத் தரிசித்து வந்தேன். மிக அருமையான கோயில் பக்கத்திலேயே மேம்பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோயிலில் உள்ள அம்மன் பார்வதி. ஸ்தலத்தின் படி சாகம்பரி என்று பெயர். 

மிக அருமையான விஷ்ராந்தியான மாலை நேரத்தில் நல்ல தரிசனம். வனசங்கரி என்ற பேருக்கு ஏற்றாற்போல சிங்கம் சூழ தரிசனம் கொடுக்கிறாள் அன்னை. சுற்றிலும் அம்மன் சந்நிதிகளும் ஸ்தாபிதம்/ எழுந்தருளப் பண்ணக்கூடிய இடமும் இருக்கு. சண்டி ஹோமம் நடக்குமோ தெரியவில்லை. 

(பாதாமியில் இருக்கும் பனசங்கரி கோயில் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் கட்டப்பட்டதாம் இக்கோயில்.அவர்களின் குலதெய்வம். ஜனவரி ஃபிப்ரவரியில் பனசங்கரி யாத்ரே என்ற ரத யாத்திரையும், படகுத் திருவிழாவும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம். தேவி ரதத்தில் எழுந்தருளி உலாவரும் காட்சி கண்கொள்ளாதது. பாலவ்வா, பனடவ்வா, சன்கவ்வா,ஷ்ரவந்தி, சௌடம்மா, வனதுர்கே என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். சைவ வைணவர் ஜெயின் சாக்தர்களின் வழிபாட்டுக்கு உரிய சக்தி கோயில் இது. இதன் தீபஸ் ஸ்தம்பம், முக மண்டபம், அர்த்தமண்டபம், விமானம்  இதெல்லாம் விஜயநகரக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. சிம்மவாஹினியாக எட்டுக்கரங்களுடன் ப்ரத்யட்சமாகும் தேவி தன் காலடியில் அரக்கனை அடக்கும்விதமாக இருப்பது பார்க்கும்போதே மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. ஹரிஷ்சந்திர தீர்த்தம் இங்கே ஸ்தல தீர்த்தம். இங்கே இருக்கும்  விக்டரி டவர் என்று அழைக்கப்படும் கோபுரம் விஜயநகர இந்து முஸ்லீம் ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கந்தபுராணத்திலும் பத்மபுராணத்திலும் சொல்லப்படும் துர்காம்சுராவை அழிக்க வனசங்கரியாக அவதாரமெடுத்தவள் பார்வதி. சுற்றி இருக்கும் வனத்தில் தென்னை, வாழை, பனை, வெற்றிலை போன்ற செடி கொடிகள் நிறைந்த இடத்தில் இருப்பதால் சாகம்பரி ( VEGETABLE GODDESS ) ன்னு நாமகரணம். திருவிழா டைம்ல 108 வகையாக காய்கறிகளை சமர்ப்பணம் செய்வாங்களாம். )

பெங்களூருவில் இருக்கும் பனசங்கரி கோயில் பாதாமியில் இருந்து சாகம்பரியின் மூலமூர்த்தியைக் கொண்டுவந்து ஸ்தாபிதம் செய்யப்பட்டு  1913 இல் சோம்நாத் ஷெட்டி என்பவரால் கட்டப்பட்டதாம். பெண்டகாலுரு என்றவரிடம் இருந்து உற்சவமூர்த்தி கொண்டு வரப்பட்டு ப்ரதிஷ்டை செய்யப்பட்டதா அர்ச்சகர் சொல்றாரு. 

கஷ்டத்தையும் வறுமையையும் நீக்கும் கடவுள். ராகுகாலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கும்பிடுவதால் மிகப் பலன் உண்டு. 

ரொம்பக்கூட்டமாகவும் இருக்கு..

செப் 13 பனசங்கரியின் பிறந்தநாளாம்.

அக்டோபர் – தசரா கொண்டாட்டம்

கோயிலின் ஆண்டுக்கொண்டாட்டங்கள் டிசம்பர் கடைசி, அல்லது ஜனவரி முதல்வாரத்துல இருக்குமாம் ( புஷ்ய மாசம்னு சொல்றாங்க. = 10 ஆவது மாசமா, (சூன்யமாசம்னு சொல்றாங்க) பூச நட்சத்திரம் வரும்நாளான்னு சரியான பதம் தெரியல ) 

பெங்களூருவில் இருக்கும் பணக்காரக் கோயிலில் பனசங்கரிக்குத்தான் முதலிடமாம் அப்பிடின்னு இந்த வீடியோவுல சொல்றாங்க. 

”சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்11”

”சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே  11”5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பணக்காரக் கோயிலின் தகவல்களுக்கு நன்றி சகோதரி...

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமையான அழகான கோயில்! விரிவான தகவல்களும் படங்களும் ரசிக்க வைத்தன! நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கோயில் தகவல்கள் எல்லாமும் + படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி தளிர் சுரேஷ்

நன்றி விஜிகே சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...