திங்கள், 13 ஏப்ரல், 2015

பான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில கணங்கள். பாகம் 3 புதிய பயணியில்.


கோட்டைக் கதவிலும் கல் சாளரங்கள்

ஆக்ரா கோட்டைக்குச் செல்லும் நுழைவாயிலும் மற்றொருபுரம் இருக்கிறது. 
 அண்டர்க்ரவுண்டில் இருக்கும் பல்வேறு சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

 இக்கோட்டையினுள்ளே இரண்டு திறந்த முற்றங்கள் கொண்ட இரண்டு அரசவை வளாகங்களும் இருக்கின்றன . மிக அழகாக வடிவமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் இதைத் தாங்கி இருக்கின்றன. மிக அழகான ஓவியங்களும் வண்ணக் கண்ணாடிகளும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மலையின் சிகரப் பகுதியில் பூமியை விட 300 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கோட்டை. 

ஜூலா கர், கேசர் குண்டா, பான் சிங்கார் ஆகிய அடுத்த அடுத்த தளங்களில் அமைந்துள்ளன. அடுத்த தளத்தில் கூடங்களும் அதன் அடுத்த தளத்தில் சமையல் கூடமும் இருந்ததா சொல்றாங்க. சில படிகள் ஒரு ஆள் மட்டுமே நடக்கக் கூடியதா இருக்கு. பல படிகள் இறங்கினா கொஞ்சம் வவ்வால் வாடையோடு மூச்சு முட்டும் வட்டவடிவிலான மிகப் பெரும் தூண்கள் செதுக்கப்பட்ட கூடம் இருக்கின்றது. 

ராணிகள் வாழ்ந்த அந்தப் புரங்கள், இறைவணக்கத்துக்காக அமைக்கப்பட்ட 700- 800 நூற்றாண்டு பழமையான கோட்டீஸ்வர் டெம்பிள் எனப்படும் ( சிவலிங்கம் , சக்தி அமைக்கப்பட்ட ) சிவன் கோவில் , 


புராணக் குளம், ஜௌஹார் குண்ட், செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட கரண் மஹால் போக இன்னும் பல மாளிகைகள் இருக்கின்றன. பார்க்க ஒரு நாள் போதாது. கட்டுவதற்கு எத்தனை நாட்கள் தேவைப்பட்டனவோ. மேலும் அங்கே அவ்வப்போது பழுதானவற்றைச் செப்பனிடும் வேலையும் நிகழ்ந்து வருகின்றது. சில மக்கள் அங்கே இருக்கும் திறந்தவெளி மஹாலின் ஹாலிலேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டு பணிசெய்து வருகிறார்கள். 

இயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட பலகணிகள் ,கற்சாரளங்கள் அலங்கரிக்கின்றன. கற்களையும் பாறைகளையும் குடைந்து வெட்டி சாளரங்களையும் உப்பரிகைகளையும் அமைத்துள்ளார்கள்  பார்க்கும்போதே ராணிகளும், ராஜாக்களும் நிலவொளியில் அமர்ந்திருப்பது போல் உள்ளது. தினமும் இரவில் இந்நகரைப் பற்றிய லைட் ஷோ இக்கோட்டை முகப்பில் ( ஆங்கிலம் & ஹிந்தியில் ) நடைபெறுகிறதாம். 

நகருக்குள் ஷிர்டி சாய்பாபா கோயிலும் மொராரில் விவஸ்வான் மந்திரும் அமைந்திருக்கிறது. இங்கே ஒரிஸ்ஸா, புவனேஷ்வரில் உள்ளது போல சூரியனுக்குக் கோவில் எழுப்பி உள்ளார்கள். மிகப் ப்ரகாசமான கோயில் மிகப் பெரும் தோட்டத்தோடு அமைந்துள்ளது. குயில்களும் ,மயில்களும் அணில்களும் ஆடிக் களிக்கின்றன. சூரியகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரிக்கின்றன. மணிப்புறாக்களும் மாடப் புறாக்களும் பறந்து களிக்கின்றன. அழகிய பூங்கா அமைந்துள்ளது.

 விவஸ்வான் மந்திரும் ரெட் சாண்ட் ஸ்டோனால் கட்டப்பட்டுள்ளது. உள்ளூர்க்காரர்கள் அநேகர் இங்கே காலையில் உடற்பயிற்சி , யோகா தியானம்  சூரிய நமஸ்காரம் செய்கின்றார்கள். பேரமைதியும் சாந்தமும் நிலவும் இடம் இது. 

பான் கடைகள், பானி பூரி, பனீர் மசாலா , பால் பொருட்களாலான உணவுகள் இனிப்புகள் இங்கே ப்ரசித்தம். நம்மூரு மசால் தோசையை மக்கள் விரும்பி உண்கின்றார்கள். ஐ சி எஃப் பில் மசாலா தோசை விற்றுக்கொண்டே இருக்கிறது. சாம்பார்தான் புளி ரசம் போல இருக்கு. அதையும் குடிக்கின்றார்கள் மக்கள். நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமமிட்ட முக்காடு அணிந்த பெண்களும் , தலைப்பாகை அணிந்த சில ஆண்களையும் காண முடியும் இங்கு. 

ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் இருக்கிறது. ஹோட்டலில் தங்கியதால் தங்குமிடங்கள் பற்றித் தெரியவில்லை. ஆயிரம் ரூபாயில் ரூம்கள் கிடைக்கும். அரசு தங்குமிடங்கள் இருந்தால் குறைவான வாடகைக்குக் கிடைக்கலாம். கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்று பூர்வமான இடம் இது. 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

பான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில கணங்கள். பாகம் 1. புதிய பயணியில்

 

பான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில கணங்கள். பாகம் 2. புதிய பயணியில்4 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகான பிரும்மாண்டமான படங்களுடன் அற்புதமான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான படங்கள்...

ரசம் எப்படி இருக்குமோ...? ஹிஹி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி தனபாலன் சகோ. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...