செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில கணங்கள். பாகம் 2. புதிய பயணியில்

இரண்டாவது தோமர் அரசரான 1480 – 1486 இல் கீர்த்தி சிங் ( கரண் சிங் ) கட்டிய கரண் மஹால் இந்திய கட்டிடக் கலையம்சம் கொண்டு கட்டப்பட்டது. செவ்வக வடிவக் கட்டிடமான இது இரண்டு மாடிகளைக் கொண்டது. இதன் நடுவில் அரசவை மண்டபம் இருந்திருக்கிறது. இந்த மஹாலில் துருக்கியர்களின் நீராடும் இடமான ஹமாம் என்ற மண்டபமும் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. அக்பரின் அவையை அலங்கரித்த நவரத்னமான இசைக்கலைஞர் தான்சேன்,முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமல்ல, உஸ்தாத் அம்ஜத் அலி கானும் பிறந்த ஊர் இதுதான். வருடந்தோறும் பல்வேறு இசைக்கலைஞர்களும் கூடி நடத்தும் தான்சேன் சங்கீத் சம்ரோஹ் மற்றும் கஜல் நிகழ்ச்சி குவாலியர் காரனா என்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த ஊர் திருமணங்களிலும் பிரசித்தி பெற்ற ஆஹிரி, லாங்கி,துல்துல் கோரி போன்ற நடனங்கள் ஆடப்படுகின்றன. 

சுதந்திரப் போராட்டத்தில் வீரப் பெண்மணி ஜான்சிராணி லெட்சுமி பாயும், தாந்தியாதோபேயும் இங்கேயிருந்துதான் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார்கள். ரத்தம் தோய்ந்த கொடும் போர்கள் நிகழ்ந்த இடமும் கூட இது.

1508 இல் தோமர் வம்சத்து ராஜா மான்சிங் கட்டிய இக்கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் கைப்பற்றியவுடன் அரசாங்கக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாகவும் திகழ்ந்திருக்கிறது.கூண்டுகள் கொண்ட நிறைய அறைகள் தென்படுகின்றன.  இரண்டு பீரங்கிகள் ஓரிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சிறிய பீரங்கியும் கர்ண மஹாலுக்குப் போகும்வழியில் வைக்கப்பட்டுள்ளது. 

இக்கோட்டையினுள் மனிதர்கள், மான்கள், யானைகள் , சிங்கங்கள், வாத்துகள், வாழைமரங்கள், மயில்கள், ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன, இதில் என்ன சிறப்புன்னா வர்ணங்கள் அடிக்கப்படாமல் வர்ணக் கற்களை வெட்டி ஒட்டி அழகு படுத்தப் பட்டுள்ளது. நூற்றாண்டுகள் தாண்டியும் இந்த வண்ணங்கள் நிலைத்து நிற்குது.இதை ஜெயின் ராக் கட் கல்சர்னு சொல்றாங்க. 

சீக்கிய குருத்துவாராவும், சாஸ்பஹூ கோயிலும் பார்க்க வேண்டியவை. ( சாஸ் பகூ என்றால் ஹிந்தியில் மாமியார் மருமகள். – ஆனால் சாஸ்த்ர பஹூ என்ற விஷ்ணுவின் கோயில் என்றும் சொல்கிறார்கள். ) இக்கோயிலில் சரஸ்வதி, விஷ்ணு, பிரம்மா சிலைகள் செதுக்கப்பட்டிருக்கு. கச்வாஹா வம்சத்தைச் சேர்ந்த அரசன் மகிபாலனால் இக்கோவில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கு.

டிஸ்கி :- இதையும் பாருங்க. 

பான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில கணங்கள். பாகம் 1. புதிய பயணியில்

 


7 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படித்தேன். ரசித்தேன். பதிவு படித்ததும் நான் சென்று வந்த பயணம் மனதில்.

என்னுடைய வலைப்பூவிலும் “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில். மொத்தம் 27 பதிவுகள்..... முடிந்த போது படித்துப் பாருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வர்ணக் கற்களை உபயோகித்தே... சிறப்பான தகவல்களுக்கு நன்றி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் அருமை! விவரணமும் அருஅமி! ரசித்தோம். சகோதரி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகச்சிறப்பான படங்கள் + தகவல்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நிச்சயம் வெங்கட் சகோ. நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் :)

நன்றி தனபாலன் சகோ

நன்றி துளசிதரன் சகோ

நன்றி கோபால் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...