புதன், 8 அக்டோபர், 2014

நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

 எத்தனை மலர்கள் இருந்தாலும் ஒற்றை ரோஜாவுக்கு ஈடாகாது. அந்த வகையில் பெங்களூருவின் லால்பாகில் எடுத்தது இந்த ரோஜாக்கள்.


லால்பாகில் மலர்க்கண்காட்சி, காய்கனிக் கண்காட்சி என்று வருடந்தோறும் சுதந்திர தினம் குடியரசுதினங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 

பெங்களூருவின் சில் சில் க்ளைமேட்டுக்கும் அதன் வனப்புக்கும் இந்த மலர்கள் எல்லாம் ஒரு சாம்பிள்தான்.

குளு குளு கண்ணாடி மாளிகையில் இவை தனியாகப் போஷிக்கப்படுகின்றன.

எத்தனை எத்தனை வண்ணங்கள் அத்தனையிலும் ஜொலிக்கும் ரோஜாக்கள்.

சிவப்பு ரோஜா என்றாலே நேரு மாமா ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது.

மஞ்சள் நட்புக்கு இலக்கணமாம்.

ரோஸ் காதல் ரோஜாவாம்.

ஒரு நாளோ சில நாட்களோ மடிந்து போகும் மலர்கள் என்றாலும் வாழும் காலம்வரை எவ்வாறு மணம் வீசி மலர்ந்து சிரிக்கின்றன ரோஜாக்கள். மலர்ச்சியை நாமும் கைக்கொள்வோம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
 3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.

7 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகு மலர்கள். நல்ல படங்கள்.

priyasaki சொன்னது…

வா..வ் எல்லாமே மிகமிக அழகான ரோஜாக்கள். சூப்பர். நன்றிக்கா பகிர்வுக்கு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா என்ன ஒரு கொள்ளை அழகு! ரோஜாக்கள் எப்போதுமே ராஜாக்கள்? ஓ! சாரி! ரைமிங்க் வேண்டாம் ராணிகள் தான்! எல்லாமே அழகுதான்! அதிலும் அந்த 3 வதும், 5 வதும் மனதைக் கவர்கின்றன! அத்தனை அழகு! மிக்க நன்றி பகிர்தலுக்கு!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரோஜாக்கள் எல்லாமே கொள்ளை அழகு! ரோஜாக்கள் என்றாலே ராஜாக்கள் ஓ! சாரி! ராணிகள் தானே! எல்லாமே அழகுதான் 3 வதும், 5 வதும் மனதைக் கவர்கின்றன! மிக்க நன்றி பகிர்தலுக்கு!

சே. குமார் சொன்னது…

ரோஜா... அழகு..
படங்கள் அனைத்தும் அழகோ அழகு அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ப்ரிய சகி

நன்றி துளசிதரன் சகோ.. நான் தன்னந்தனிக்காட்டு ரோஜான்னு தலைப்பு கொடுத்துருக்கணுமோ :)

நன்றி குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...