வியாழன், 25 செப்டம்பர், 2014

பெங்களூரு நவராத்திரி.

பெங்களூருவில் கே ஆர் புரத்தில் நவராத்திரியின்போது சாமியை எழுந்தருளப்பண்ணி வீதியில் பல்லாக்கில் உலாவாக எடுத்துவந்தார்கள்.


ஒரு உறவினர் வீட்டுக்குப் போனபோது மெயின் மார்க்கெட்டுக்கு அருகில் பொன் மாலை வெய்யில் பொழுதில் அம்பாள் தரிசனம்.

மிக ஜாஜ்வல்யமான அலங்காரத்தில் அருள் பாலித்தபடி அந்தி மாலை வெய்யிலில் அழகுத் தோற்றத்தில் மெய் சிலிர்க்க வைத்தாள்.

அம்பாள் மட்டுமல்ல அம்பாளுடன் கூடவே சிம்மவாஹினிக்குக் சிம்மக் கொடிகளும் பிடித்து வந்தார்கள். நெற்றிக் கண் போல  குங்குமமிட்ட மனிதர்கள்.

இதில் ஸ்பெஷல் என்ன வென்றால் ஊர்வலத்தில் ரோட்டில் கோலாட்டக்கட்டைகளுடன் சிறுமிகளும் வில் அம்புடன் குட்டி இராமலெக்ஷ்மணர்களும்  புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் வந்ததுதான்.

தீய குணங்களைப் போரிட்டு அழித்து நல்ல குணங்களைப்  புதுப்பிக்க வேண்டும் என்பதே நவராத்திரி தரும் செய்தி.

ஜெய் மாதா தீ.. JAI MADHA DI.

7 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான படங்கள்! பரவாயில்லை இப்போதும் கூட பெண்கள் கோலாட்டம் அடிக்கின்றார்கள் போலும்!

KILLERGEE Devakottai சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமை சகோதரி, நவராத்திரி நல்வாழ்த்துக்கள்..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசிதரன் சார்

நன்றி கில்லர்ஜி

Thenammai Lakshmanan சொன்னது…

ஆமாம் துளசிதரன் சகோ. அந்த ஊரில் இன்னும் பெண்கள் கோலாட்டம் அடிக்கிறார்கள். அது ஒரு ட்ரெடிஷன் போல தெரியுது.

நவராத்திரி நல்வாழ்த்துகள் கில்லர்ஜி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான படங்கள்....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...