எனது நூல்கள்.

திங்கள், 28 ஜூலை, 2014

சென்னை ஹைதை பெங்களூருவில் மெட்ரோ ரயிலும் மேம்பாலங்களும்.மெட்ரோ ரயிலும் மேம்பாலங்களும்.

பெங்களூரு டூ மைசூர் ரோடு
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சமீப வருடங்களாக மெட்ரோ ரயிலின் பொருட்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பெங்களூரு வி வி  புரம்.
பன சங்கரி
ரோட்டின் நரம்பைப் பிளந்தது போன்று அங்கங்கே குப்பை கூளங்களும் தூசிகளும் கற்களும் சூழ ஒரு ஆபரேஷன் தியேட்டரில் போவதுபோலிருக்கிறது.

வடபழனி

கோத்தகுடா ஹைதை.
எப்போது இவை எல்லாம் முடியுமோ தெரியவில்லை. நாற்கரச் சாலைகளும் மேம்பாலங்களும் மிக உதவியானவை என்றாலும் மக்களின் இருப்பிடங்களை நசுக்கி இடித்துக் கிடக்கும் காட்சிகள் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்.

மெஹ்திப்பட்டினம் ஹைதை
மெஹ்திப்பட்டினம் ஹைதை
காரைக்குடிக்கருகே அமைக்கப்பட்டு வரும் பைபாஸ் சாலைக்காக பாதி நேமத்தான் பட்டி கிராமமே காணாமல் போய் இருக்கிறது. அப்படி ஒரு ஊர் ( அத்திப்பட்டிபோல ) இருந்ததா என்று இனி மேப்பிலும் தேடணும்.

கேஆர்புரம் செல்லும் வழி பெங்களூரு.
கேஆர்புரம் செல்லும்வழி. பெங்களூரு
நாட்டின் வளர்ச்சிக்காக சில கிராமங்களை விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் என்றாலும் சாலைகளின் விரிவுக்காக வயலும் வயல் சார்ந்த இடங்களிலும் வாழும் மனிதர்கள் வீடுகள் ( மதுரை பைபாஸ்) அரையும் குறையுமாக இடிக்கப்பட்டிருக்கும் காட்சி சில வருடங்களுக்கு முன் பகீர். என்ற உணர்வை ஏற்படுத்தியது.

மலையையே கூறு போட்டு முழுங்குறாங்களாமா. இதுல நீங்க வீட்டைப் பத்திப் பேச வந்துட்டீங்கன்னு சொல்றீங்களா. மலையிலும் வாழ்வுண்டு.( மலைக்குத்தான்  வாழ்வில்லை )  ஆனால் அவை இடம் பெயர்ந்து சென்று விடும். ஆனால் இல்லங்களுக்குள் ஆன்மா இருக்கலாம். அவை எங்கு செல்லுமோ.

செட்டிமுருகன் கோயில் செல்லும்வழி பெங்களூரு
இவை எல்லாம் சென்னை, பெங்களூரு , ஹைதையில் எடுத்தவை. அதுவும் ஹைதை மெஹ்திப் பட்டினத்தில் உள்ள இடங்களுக்கு எல்லாம் தூண் எண் தான் முகவரி கொடுக்கிறார்கள். பில்லர் நம்பர் 72 இப்படி. இங்கே திரும்பணும் என்று.. அந்த அளவு மேம்பாலங்கள்தான் அடையாளத்தை ஆக்கிரமிக்கின்றன.

நாம்பள்ளி  ஹைதராபாத்.
அடுத்த அரசாங்கம் வந்து வேறு குழப்படிகள் எல்லாம் பண்ணுமுன்பு சீக்கிரம் இவை கட்டி முடிக்கப்பட்டால் தேவலை.6 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

kaniB சொன்னது…

பெங்களூர் இடங்களில் சிறு திருத்தங்கள்.

வன சங்கரி - பணஷங்கரி / பனஷங்கரி
கே வி புரம் - கே ஆர் புரம் (கிருஷ்ணராஜபுரம் என்பதன் சுருக்கம்)

இசக்கிமுத்து சொன்னது…

அருமை !

ராமலக்ஷ்மி சொன்னது…

நான் சொல்ல வந்ததை கனி அவர்கள் சொல்லி விட்டுள்ளார். பனசங்கரி அம்மன் கோவில் பிரசித்தமானதும். கே.ஆர்.புரம் ஹாங்கிங் பிரிட்ஜ், படத்தில் இருப்பது.
Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி கனி. திருத்தி விட்டேன் சகோ

நன்றி இசக்கிமுத்து சகோ

நன்றி ராமலெக்ஷ்மி. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...