எனது நூல்கள்.

வியாழன், 17 ஜூலை, 2014

கேரளா சோழா & ஹைலாண்ட்.

கோவை மலையாளிகளுக்குப் பிடித்தது மத்தி மீன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மீன் இல்லாமல் ஒரு நாள் கூட உணவு கிடையாது.

சென்ற வருடம் கேரளா சென்றபோது நண்பர் கோயில் தரிசனம் எல்லாம் முடித்து ( பத்மநாப சாமி கோயில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் , கொச்சுவெளி பீச் ) ஹோட்டல் சோழாவுக்கு  மதிய உணவருந்த அழைத்துச் சென்றார்.


நல்ல கேரள ஸ்டைல் அரிசிச் சோறு மீன் வறுவல் கப்பங்கிழங்கு மசியலுடன் செம காரமான உணவு. மீன் குழம்பு, சாம்பார், அவியல், காளன், ஓலன், எரிசேரி, புளிசேரி, மிளகூட்டல், பப்படம், எலுமிச்சை ஊறுகாய் , மாங்காய் ஊறுகாய், அடப் பிரதமன் என்று அட்டகாசமான உணவு.

நல்ல பொன்னி அரிசியே சாப்பிட்டுப் பழகிய நாக்குக்கு கேரள அரிசிச் சோறு கொஞ்சமாகத்தான் இறங்கியது. ஆனாலும் அந்த கொட்டைச் சிவப்பரிசி செம ருசி. மீனும்தான்.இந்த மீனின் தலை ஒரு ருசி, உடல் ஒரு ருசி, வால் ஒரு ருசி என்று சொன்னார். ஆமாம் ருசியாத்தான் இருந்தது.

 POMFRET  என்று நினைக்கிறேன். அதை அந்த மலையாள நண்பர் AVOLI FISH FRY என்று உச்சரித்தார். இங்கே நண்பர்கள் அதை கறி மீன் என்றார்கள். எந்த மீனா இருந்த என்ன செம ருசிதான்.

இங்கே இண்டீரியர் டெக்கரேஷன் ரொம்ப அழகு. கூட்டமுமில்லை. அமைதியாக சாப்பிட ஏற்ற இடம். அழகான லைட்டிங் மற்றும் கட்டிட அமைப்பு. 

இன்னொரு முறை ஹோட்டல் ஹைலாண்டில் இரவு உணவு அருந்தினோம். வழக்கம் போல வெஜ் ஃப்ரைட் ரைஸ், நான், பராத்தா, பட்டர் சிக்கன், ஃப்ரைட் ஃபிஷ் க்ரேவி.

மிக ருசியான உணவுகள். இங்கே எல்லாம் ஹோட்டல்களில் மீன் உணவும் இருக்கு. அழகு மீன்கள் உலவும் மீன் தொட்டியும் ( அக்வேரியமும் ) இருக்கு. ஏதோ ஒரு விதத்தில் மீன் இருந்தே ஆகணும். :)

வயிற்றைக் கெடுக்காத உணவுகள். பொதுவா இந்த மாதிரி ஹோட்டல்கள், அல்லது பஃபேக்களில் சாப்பிட நேர்ந்தால் சாஸ், ஊறுகாய் போன்றவற்றை தொட்டுச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு பிடித்தால் சாப்பிடலாம். பழசாக இருக்க வாய்ப்புண்டு. சூடாக இருக்க எதை சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லை.

திருவனந்தபுரம் போனா ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில், அனந்த பத்மநாபசாமி கோயில் , கொச்சுவெளி பீச், கோவளம் பீச் போவது போல சோழாவிலேயும் ஹைலேண்டிலேயும் சாப்பிட்டுவிட்டு வரலாம்.

3 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பதிவு
தொடருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ் பாவண்ணன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...