எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 ஜூன், 2014

சிகரம் ஸ்க்ரிப்ட் தீம்ஸ் டயலாக்ஸ்.


கான்செப்ட்.
சிகரம் மாட்ரிமோனியல்
சிகரம் டூர்ஸ் & ட்ராவல்ஸ்.
சிகரம் ஆன்லைன் ஷாப்பிங்
சிகரம் ப்ராப்பர்டி
சிகரம் கிஃப்ட்ஸ்
இது சம்பந்தமான விளம்பர வாசகங்கள்.
**********************************************************************

சீன்.. 1:-

காரெக்டர்கள் :- அப்பா., அம்மா.

லொகேஷன்:-    ஸ்விஸ் வீடு.

மாலை நேரம். சோஃபாவில் அமர்ந்திருக்கும் 50 வயது அப்பா., 45 வயது அம்மா. இருவரும் சிந்தனையோடு இருக்கிறார்கள். பெண்ணின் படம் ஹாலில் இருக்கிறது. அதைப் பார்த்தபடி.

அப்பா:- நம்ம பொண்ணு நல்லா வளர்ந்துட்டாயில்ல.

அம்மா:- ஆமாங்க. திருமணம் செய்யணும். நல்ல மாப்பிள்ளை அமையணும் கவலையா இருக்கு.

அப்பா:- கவலையை விடும்மா. ( NO WORRIES. NO QUERIES ) நம்ம சிகரம் மேட்ரிமோனியல் இருக்கு. மாப்பிள்ளை பார்க்கிறதுலேருந்து மறுவீடு வரைக்கும் அவங்க பார்த்துப்பாங்க.

தம்ஸ் அப் செய்தபடி கோரஸாக  சொல்கிறார்கள். :-  

 சிகரம் இப்போ நம்ம கையில..
******************************************************************************

சீன்..2.:-

காரெக்டர்கள் :- அப்பா., அம்மா.

லொகேஷன் :- அதே வீடு. இன்னொரு நாள்.

கம்ப்யூட்டரில் ஆன்லைன் டிக்கட் புக்கிங் செய்தபடி  இருக்கும் கணவரிடம் மனைவி
மனைவி :- சீக்கிரம் லாகின் செய்ங்க..

கணவர்:- வெயிட் வெயிட் . நோ டென்ஷன்மா.  நம்ம ஃபாமிலி் மெம்பர்ஸ் எல்லாருக்கும் ஸ்விஸ் டு சென்னை மாரேஜுக்காக பாக்கேஜ்டு டூர் அண்ட் ஹோட்டல் புக்கிங்   செய்யலாம். எல்லாம் அவைலபிள். ஏன்னா சிகரம் ஆன்லைன் புக்கிங்கால  எல்லாமே ஈஸி. ஜஸ்ட் லாகின் அண்ட் செக்கின்.

தம்ஸ் அப் செய்தபடி கோரஸாக சொல்கிறார்கள். :-  

சிகரம் இப்போ நம்ம கையில..
************************************************************

சீன் ..3 :-

காரெக்டர்கள் :- அம்மா., அப்பா., மகள்.

லொகேஷன் :- ஜ்வெல்லரிஷாப்., கோபுரமான ஒரு டிசைனில் டாலர் உள்ள ஒரு செயினை மகள் கையிலெடுத்து லேசான தயக்கத்தோடு  பார்க்கிறாள். அம்மா மலர்ச்சியோடு அதை மகள் கழுத்தில் வைத்துப் பார்த்து சிரிக்கிறாள்.  அப்போது

அப்பா:- எது பிடிச்சிருக்கோ  அதை எடுத்துக்கம்மா.  நான் எனக்கு பிடிச்ச சிகரம் ஆன்லைன் மணி ட்ரான்ஸ்ஃபரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். நமக்குத் தேவையான பணத்தை அடுத்த நிமிஷம் மாத்திக்கலாம். எதுக்கும் கவலையில்லை .ஏன்னா

தம்ஸ் அப் செய்தபடி கோரஸாக சொல்கிறார்கள். :-  

சிகரம் இப்போ நம்ம கையில...
*********************************************************************

சீன் ..4..:-

காரெக்டர்கள்:-  இளம் ஜோடி. ( அந்தத்திருமணமான பெண்ணும் அவள் கணவனும்)

லொகேஷன்:- மலைப்பாங்கான இடம். பனிச்சிகரங்களோடு.சிறிது வெட்கமான அணைப்போடும் புன்னகையோடும். ஷால் போர்த்தியபடி.

இளம் மனைவி:- ஏன் ஹனி சர்ப்ரைஸா இந்த இடம்.  ம்ம்ம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

இளம் கணவர்:-  என் தேவதையை உயரமான இடத்துல வைக்கணும்னு கனவு. அது நனவாச்சு. சிகரம் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸால.

மனைவி பனிச்சிகரங்களைக் கைநீட்டித் தொடும்படிப் புகைப்படம் எடுக்கிறார். 

தம்ஸ் அப் செய்தபடி கோரஸாக சொல்கிறார்கள். :- 

 சிகரம் இப்போ நம்ம கையில...
*************************************************************************

சீன் ..5..:-

காரெக்டர்கள் :-  அதே இளம் கணவன்., மனைவி.

லொகேஷன்:- படுக்கையறை. விடியற்காலையில் குளித்து வரும் கணவருக்கு உடைகளை சர்ப்ரைசாக பிறந்தநாளில் அளிக்கிறாள் இளம் மனைவி. அதை உடனே அணிகிறார் அவர் .

இளம்கணவர் :-  அட பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருக்கே. எப்பிடி வாங்கினே.

இளம் மனைவி:- கூடவே இருக்கேனே  எது ஃபிட்டாகும்னு எனக்குத் தெரியாதா.    சிகரம் ஆன்லைன் ஷாப்பிங்கல வாங்கினேன். அது எப்பவுமே நமக்கு ஃபிட்தானே..

தம்ஸ் அப் செய்தபடி கோரஸாக சொல்கிறார்கள். :-  

சிகரம்  எப்பவுமே  நம்ம கையிலே..
*********************************************************************

சீன் ..6..:-

காரெக்டர்கள் :- இளம் அப்பா., இளம் அம்மா., பட்டாம்பூச்சியாய்ப் பறக்கும் அழகுக் குட்டிப் பெண்.

லொகேஷன்:- விசாக் கடற்கரை. அல்லது மெரினா, ஷாந்தோம் போல. பீச்.  மணல் வீடு கட்டி விளையாடுகிறாள் குட்டிப் பெண். அப்போது அப்பா அம்மாவையும் அழைக்கிறாள்.

குட்டிப் பெண்:- மம்மி ஹெல்ப் மீ., டாடி ஹெல்ப்மீ. வி வில் பில்ட் எ ஹவுஸ் ஃபார் அஸ்.

அலையடிக்காத இடத்தில் மூவரும் வீட்டுக்கு சிகரம் அமைத்து கைகளை  சிகரத்தைக் குவித்து வைத்து கூவுகிறார்கள்.

தம்ஸ் அப் செய்தபடி மூவரும் கோரஸாக:-  எங்க ஹாலிடேயெல்லாம் ஜாலிடேதான்  சிகரம் ரெஸார்ட் புக்கிங்கால.

சிகரம் எப்பவுமே நம்ம கையில..
********************************************************************
காப்ஷன்:-
சிகரம் எப்பவுமே நம்ம கையிலே.
இந்த வெப்சைட்டுக்கு விசிட் செய்ங்க..
சிகரம் எப்பவுமே நம்ம சர்வீஸ்ல..

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...