எனது நூல்கள்.

செவ்வாய், 13 மே, 2014

வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI)

ஜேம்ஸ் பாண்ட் படங்களில்தான் தண்ணீரிலும் தரையிலும் பயணம் செய்யும் காரைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் துபாய் சென்றிருந்த போது நாங்கள் தண்ணீரிலும் தரையிலும்  செல்லும்  ஒரு பஸ்ஸில் பயணம் செய்தோம். ரொம்ப வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ்தான் அது.துபாயின் பர் ஜுமான் ஷாப்பிங் செண்டரிலிருந்து ஷேக் கலீஃபா ரோட், அல் வாசில் ப்ரிட்ஜ், வாஃபி சிட்டி செண்டர், அல் பூம் ரெஸ்டாரெண்ட் வழியாக துபாய்  கிரீக் எனப்படும் இடம் வரை செல்கிறது.

இந்த பஸ். தரையில் ஓடிக் கொண்டிருக்கும் இதில் துபாயின் ஷேக் ஸாயத் ரோட்டின் வரலாற்றைச் சொல்கிறார் வழிகாட்டி.இவர்  எல்லா மொழியும் பேசுகிறார்.

அரபிக், ஆங்கிலம் ஃப்ரெஞ்ச் ஆகிய மூன்றிலும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே வந்தார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் ஒரு பெரிய நெடுஞ்சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டிடங்கள் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி அதன் பின் இன்றைய துபாயின் ஷேக் ஸாயத் ரோடின் ( 16 லேன்..!!! ) புகைப்படத்தையும் கட்டிடங்களையும் காட்டி இந்த வளர்ச்சி எத்தனை வருடங்களின் ஏற்பட்டிருக்கும் என்று கேட்டார்.


நாங்கள் ஒவ்வொருவரும் 30 , 40 , 50 , 100 என்று வருடங்களைச் சொல்ல அவரோ அஸால்டாக 20 வருடம்தான் ஆகிறது என்று சொன்னார்.

மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சிதான். டெடிகேட்டட் என்பார்கள் அல்லவா. அது போலத்தான். இதில் நம் நாட்டு மக்களின் உழைப்பும் பெரும்பகுதியாகும்.

மெல்ல எல்லாக் கட்டிடங்களின் அழகையும் காட்டியபடி சென்று கொண்டிருந்த பஸ் ஒரு திருப்பத்தில் தேரா எனப்படும் படகுத் துறையை அடைந்தது.

ஓ நாம் இதிலிருந்து ஏதும் படகில் ஏறப்போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்க பஸ்ஸே தண்ணீருக்குள் இறங்கி ஓடி படகாய் மாறி மிதக்க ஆரம்பித்தது.

ஓஓஓஓ என்று உற்சாகக் கூச்சலிட்டபடி அனைவரும் கத்தியபடி பரவசமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ( நீச்சல் தெரியாது என்ற பயம் ஒரு குறுக்கு ரேகையாய் உள்ளே ஓடியதை மறைத்தபடி ) .

சுற்றிச் சுற்றி வந்து புதுமையான கட்டிடங்களையும் பழைய கட்டிடங்களையும் பார்த்தோம். திரும்ப கீரீக் பார்க், துபாய் கோர்ட், அக் மக்டொம் ப்ரிட்ஜ், ஷேக்கா மரியமின் அரண்மனை, ஷீஃப் ரோடு, ஷேக் கலீஃபா ரோடு வழியாக திரும்ப புர் ஜுமான் செண்டரை வந்து அடைகிறது.

துபாயின் பழமையான அரண்மனைகளையும் புதிய கட்டிடங்களையும் ஒருங்கே காண முடிந்தது. துபாய் கிரீக்குக்கு மிக அருமையான ட்ரிப்பாக அமைந்தது இது.

கட்டிடக்கலையில் சிறந்து விளங்குகிறது துபாய். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒவ்வொரு வகையான கட்டிட அமைப்புக்களைத் தேர்ந்தெடுத்துத் தம் நாட்டில் அந்த ஆர்க்கிடெக்ஸிங் வகைப்படிக் கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்த பஸ் முழுக்க முழுக்க ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது. இதில் பாத்ரூம் வசதியும் உண்டு. உள் அலங்காரம், சவுண்ட் சிஸ்டம் உள்ளது.

குடி தண்ணீரும் , ஜூசும் கூட வழங்கினார்கள். உயர்தரமான சீட்டுக்கள் மற்றும் நடக்குமிடம் எல்லாம் கார்பெட்டுக்கள். பஸ்ஸில் ஏற உயரமான ஒரு சின்ன ஏணிப்படியும் இருந்தது.

ஏணிப்படி எதுக்கு என்று தெரியவில்லை என்று நினைத்தால் அது இந்த பஸ் தண்ணீருக்குள் செல்வதற்காக  உயரத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் இணைக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் தம்பியும் தம்பி மனைவியும் இந்த வொண்டர்புல் பஸ்ஸின் வித்யாசமான பயண அனுபவத்தை நாங்கள் பெற  கூட்டிச் சென்றார்கள்.

இந்த அமேசிங் எக்ஸ்பீரியன்ஸை நாங்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கையாய் பஸ்ஸின் அருகே வந்ததும் ( அதன் பக்க வாட்டில்  SEA AND LAND ADVENTURES என்று எழுதி இருந்ததை  நாங்கள் பார்க்குமுன் அதன் பின் நின்று எங்களுடன் புகைப்படம் எடுத்தார்கள்.

அப்போது தெரியவில்லை சரி வழக்கம்போல் புகைப்படம் எடுப்பதுதானே என்று. அதன் பின் தண்ணீரில் மிதந்து தரையைத் தொட்டு ஓடி வந்து இந்த வொண்டர் இறங்கியதும் ஆகா சூப்பர் என்று நாங்கள் சொல்ல அப்போதுதான் சொன்னார்கள்.பஸ்ஸின் பக்கவாட்டில் இதைப் பத்திப் போட்டிருக்காங்க. அது தெரியாம இருக்கத்தான் உங்களை அங்கே புகைப்படம் எடுத்தோம்னு..

அஹா சூப்பர் ஐடியா என்று பாராட்டி விட்டு  இன்று வந்து வெப்சைட்டில் இது பத்தி எழுத ரொம்ப சோம்பேறித்தனமா  தகவல் தேடப் போனா என்னது ஒரு டிக்கெட் 155 திர்ஹாமா.. மாஷா அல்லா.

இவ்ளோ கொடுத்தா கூட்டிட்டுப் போனீங்க.. ஒருத்தருக்கு 155 ந்னா 6 பேருக்கு 930 திர்ஹாமா.. கிட்டத்தட்ட15,810/ ரூபாயா.. ஓ மை கடவுளே..  வாழ்க வாழ்க.. தாங்க்ஸ். வேறென்ன சொல்ல..!!!!!!!!!!!!!!!!!!

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


6 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ்

G Perumal Chettiar சொன்னது…

ஓ மை கடவுளே.. வாழ்க வாழ்க.. தாங்க்ஸ். வேறென்ன சொல்ல..!!!!!!!!!
( உங்களுக்கும்தான்…!!!!!!!!!!!!!!! )

ஸ்கூல் பையன் சொன்னது…

வொண்டர்புல் பஸ்... இது எப்படி தண்ணீரில் மிதக்கிறது என்று சொல்லியிருக்கலாம்.... புதிய தகவலைத் தெரிந்திருப்போம்..

ஸ்ரீராம். சொன்னது…

நம்முடைய நாடு எப்போது இப்படிக் குறைந்த நாட்களில் முன்னேறும் என்ற ஏக்கம் வருகிறது! பஸ்சிலிருந்து பு.ப எடுத்திருக்கிறீர்கள். பஸ் நீரில் செல்வதை வெளியிலிருந்து பு.ப எடுத்துப் போட்டிருக்க வேண்டாமோ! :)))))))))))))

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி

நன்றி பெருமாள் சார். :) !

நன்றி ஸ்கூல் பையன். சக்கரம் எல்லாம் உள்ளிழுத்துக் கொண்டு போட் போல ஆகிறது என்று நினைக்கிறேன்.

நன்றி ஸ்ரீராம். போனதே ஒரு வாரம்தான். அதுவும் ஒரு ஃபங்ஷனுக்காக. எனவே புர்ஜ் கலீஃபாவும், வொண்டர் பஸ்ஸும் ஸ்கந்தர் சஷ்டி விழா இரண்டு நாளும் ஆக 4 நாட்கள் ஓடி விட்டது.

மேலும் பஸ்ஸில் ஏறும்வரை தெரியாது இது ஏதோ சிட்டி டூர்னு நினைச்சோம். தண்ணீரில் இறங்கியபின்தான் தெரியும். அப்பவும் ஏதும் வேற பஸ் தண்ணீல மிதக்குதான்னு பார்த்துகிட்டுத்தான் போனேன். ஒண்ணுமே கண்ணுல காணல.

வீட்ல விசேஷத்தை வச்சிகிட்டு (கடைசிநாள் ஷாப்பிங்க் வேற எடுத்துக்கிடுச்சு) எப்பிடி இத ஃபோட்டோ எடுக்குறதுக்காகத் திரும்பப் போகணும்னு சொல்றது.. :) பெரியவங்க எல்லாம் பின்னிடுவாங்க பின்னி :).

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...