எனது நூல்கள்.

செவ்வாய், 6 மே, 2014

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.

இந்தியாவில் ஆமை புகுந்த வீடும் ஆமினா புகுந்த வீடு போலக் கெடும் என்பது பழமொழி. ஆனால் சீனர்கள் ஆமையை அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள். ஆமை என்பது நீண்ட ஆயுளை வழங்கக் கூடிய ஒன்றாகக் கருதுகிறார்கள்.


சிங்கப்பூர் சென்றிருந்த போது இந்தச் சின்ன ஜீவன்களை ஒரு ம்யூசியத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

அவற்றில் 60 வயதான ஆசிய ஆமை மிகுந்த அதிர்ஷடத்தைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மதா மதா, எலாங்கேட்டா டார்ட்டாய்ஸ், சல்கேட்டா டார்ட்டாய்ஸ் ( அதிர்ஷ்டத்துக்கு ).தாய்லாந்து கோல்டன் டெம்பிள் டார்ட்டாய்ஸ் ( செல்வச்செழிப்புக்கு ) பான்கேக் டார்ட்டாய்ஸ், கோல்டன் டெரப்பெய்ன், ஆறு கால் உள்ள ஆமை, இந்திய ஸ்டார் ஆமை ஆகியன அவற்றில் சில.

இவ்வளவு அதிர்ஷத்தையும் கொண்டு வர்ற ஆமைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் பங்கு வகிக்கின்றன.

இந்திய ஸ்டார் ஆமைகள்.
அழிந்து வரும் ஆமை இனத்தைப் பாதுகாத்துவரும் சிங்கப்பூர் அரசின் செயல் பாராட்டுக்குரியது.

உப்பு மூட்டையா ஆமை மூட்டையா :)
இங்கே  50 விதமாத ஸ்பீஸில் இல் 800 வகை ஆமைகள் பராமரிக்கப்படுகின்றன.

இதுதான் சல்கேட்டா ஆமை. சிங்கப்பூரின் அதிர்ஷ்டம் என்ன அழகா இஷ்டைலா லுக் விடுது பாருங்க.  :)
ஒவ்வொரு ஆமையின் அமைப்பும் காலும் ஏன் அமைப்புமே வித்யாசமா இருக்கு. நடுவில் அதிர்ஷ்டம் வழங்கும் சீன நவகுபேரன்கள் சிலையும் இருக்கு.

நாம் எதையும் முயலாமல் ஆமையைக் காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். உழைத்து உயர்ந்த நாடு சிங்கப்பூர். ஆமை எல்லாம் காரணமில்ல என்பதை உணரணும். ஆமையைப் பராமரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுது. மேலும் அழிந்து வரும் ஆமைகள் இனம் இங்கே பாதுகாத்து வைக்கப்படுது.

குழந்தைகள் செம ஜாலியா என்ஜாய் பண்ணக்கூடிய இடம். சம்மர் லீவில ஒரு வாரம் டூர் அடிச்சா சிங்கப்பூரை ஃபுல்லா பார்த்துடலாம். அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய ஆமைகளை வெறுக்காம இந்தியாவிலும் வளர்த்து நம்ம நாட்டையும் செல்வச் செழிப்புள்ள சிங்கப்பூரைப் போலாக்குவோம்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE. சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.7 கருத்துகள் :

Menaga sathia சொன்னது…

படங்களுடன் பகிர்வு சூப்பர் அக்கா!!

வடுவூர் குமார் சொன்னது…

இந்தியாவிலும் வளர்த்து நம்ம நாட்டையும் செல்வச் செழிப்புள்ள சிங்கப்பூரைப் போலாக்குவோம்- முடிந்தால் - சந்தோஷம் தான்.

ஸாதிகா சொன்னது…

அறியாத தகவல்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகிய படங்களுடன் தகவல்களுக்கு நன்றி சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மேனகா

நன்றி குமார்

நன்றி ஸாதிகா

நன்றி தனபால் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகிய படங்கள் தகவல்களும் அருமை புதுமை!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...