வியாழன், 15 மே, 2014

பார்பக்யூ நேஷன்

பெங்களூருவில் இருக்கும் பார்பக்யூ நேஷனுக்கு ஒரு முறை சென்றோம். விடுமுறை நாள் என்பதால் ஆன்லைனில் புக் செய்து ( மதியம் 12 - 2.30 ஃபுல்லாக இருந்ததால் அதன் பின் 2.30 - 4 ) க்கு பஃபே புக் செய்து சென்றோம்.


மிக அருமையான உணவுகள். சென்னை வைல்ட் அமேசானிலும் முன்பொருமுறை உணவு உண்டு இருக்கிறோம். அதே போலத்தான் இருந்தது என்றாலும் இங்கே கூட்டம் ரொம்ப ஓவர்.

நாம ஒரு நாள் சமைக்காமப் போனா அங்கே என்னிக்குமே சாப்பிடும் கும்பல்கள் அதிகமா இருக்கு. இந்த விதம் விதமான சாஸ் கப்புக்களுக்குப் பக்கத்துல பெயிண்டிங் ப்ரஷ் மாதிரி வச்சிருப்பாங்க. ஏன்னா எல்லா நான் வெஜ்ஜுக்கும் ஏன் வெஜ்ஜுக்கும் இந்த சாஸுங்களை பெயிண்ட் அடிச்சு சாப்பிடத்தான்.

மென்பொறியியலாளர்கள் வன்முறையில் இறங்கி இருந்தார்கள். அதாங்க சுட்ட கறி, கோழி, எறா எல்லாத்தையும் வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள்.

மறக்காம ஸ்டார்டர்ல இருக்குற எல்லா சாலட்டையும் சாப்பிடுங்க.. இதுலேயே வயிறு ரொம்பிடும்..:)

க்ரில்டு வெஜிடபிள்ஸ் இருந்தது. ஆனா அங்கே எல்லாரும் அசைவப் பட்சிதான். சில்லி கார்லிக் க்ரில்டு வெஜிடபிள், பேபி பொடாடோ , மஷ்ரூம், பனீர், பைனாப்பிள்னு அடுக்கி வைச்சிருக்காங்க. அது போக ஃபிலாஃபில் வித் ஹம்மூஸ். செம டேஸ்ட்.

நான் வெஜ் க்ரில்லர்ல கோழி, ப்ரான்ஸ், ஃபிஷ், கோஷ் ( மட்டன்) எல்லாம் உண்டு.ஆனா இதுல தங்கிடி கபாபும், ப்ரான்ஸும்தான் டேஸ்ட். மத்த ரெண்டும் தந்தூரி மசாலா ஓவரா போட்டு பாதி வெந்தமாதிரி இருக்கு. நம்ம நாக்குக்கு ஒத்து வரல. எண்ணெயில குளிச்சு எந்திரிச்சாத்தானே நமக்குப் பிடிக்கும்.

இந்த வகையறாவெல்லாம் ஸ்டார்ட்டர்ஸோட வெட்டினவுடனே நாம அங்கே இருக்க கொடிய ரெண்டா மடிச்சு கீழ மடக்கி விட்டோம்னா( முதல் ஃபோட்டோவுல மெனு ஸ்டாண்டுக்குப் பின்னால இருக்கு பாருங்க அதான். ) அடுத்து கொடுக்க மாட்டாங்க. இல்லாட்டி க்ரில்ல வெஜ் நான் வெஜ் ஸ்க்யூவர்ஸை நிரப்பி போட்டுக்கிட்டே இருப்பாங்க. இதெல்லாம் ஒரு சாங்கியம். இதெல்லாம் தெரிஞ்சுகிட்டுத்தான் அங்கே எல்லாம் போகணும். :)

அப்புறம் முக்கிய விதி அந்த டவலை மடியில விரிச்சுக்கணும். ஃபோர்க் எப்பவும் இடது கையில கத்தி வலது கையில, அதேபோல ஸ்பூனும் வலது கையிலதான் பிடிச்சு சாப்பிடணும். ரெண்டு கையாலயும் சாப்பிடலாம்கிறது கொஞ்சம் ஆசுவாசம். :) சாப்பிட்ட பின்னாடி ஸ்பூன், ஃபோர்க், கத்தி எல்லாத்தையும் வலது கைப் பக்கத்துல ஒரே இடத்துல வைச்சுட்டோம்னா நாம் சாப்பிட்டு முடிச்சிட்டோம்னு  அர்த்தம்.

க்ரில் முடிஞ்சதுக்கு அப்புறம் மெயின் கோர்ஸ். வெஜ் சூப் அல்லது கோழி சூப், அப்புறம் கோழி தம் பிரியாணி, கோழி கடாய் மசாலா, கோஷ் சாஹா பசந்தா., கடுகு எண்ணெயில பொறிச்ச மீனு, முட்டைக் கறி,

இது போக வெஜ்ல பட்டாணி பனீர் பிரியாணி, ஆலு சிம்லா மிர்ச்( உருளை மசாலா) , வெஜிடபிள் டோ பியாசா ( மிக்ஸ்ட் வெஜ் சப்ஜி ) , தால் தட்கா ( பருப்புக் குழம்பு ) , பிண்டி சோலே ( வெண்டைக்காய் கொண்டைக்கடலை மசாலா) , புனா கோஃப்தா கறி, ( இது ரொம்ப டேஸ்ட். காய்கறி உருண்டை ), கடாய் பனீர், தால் ஈ தம் ( அதே பருப்புத்தான் ) , ப்ளெயின் ரைஸ், ( சாதம் ) ,

டெசர்ட்ல ஆரஞ்ச் பேஸ்ட்ரி, ரஸ்குல்லா, ப்ளாக் கரண்ட் சீஸ் கேக், சாக்லேட் ப்ரௌனி, இது போக ப்ரெஷா நறுக்கிய பழ வகைகள், ஐஸ்க்ரீம், ஃபிர்னி, மாவா காரமல் ஸ்லைஸ் கேக், அங்கூரி குலாப் ஜாமூன் இவ்வளவுலயும் துளித் துளி தின்னாலே வயிறு ரொம்பிப் போயிரும்.

எல்லாத்துக்கும் அதிகமில்லை ஜெண்டில் மேன் 750 ரூபீஸ் பர் ஹெட்தான். அதாவது தலைக்கு 750 ரூபாய். ஞாயித்துக் கிழமைன்னா 850 ரூபாய். தனித்தனியா ஆர்டர் பண்ணி சாப்பிட்டா சொத்துல கொஞ்சத்த விக்க வேண்டி வரும்.

பக்கத்துல ஒரு ஜோடி பிரியாணி, ரைஸ், குல்சா, பரோட்டா, நான் எதுவுமே இல்லாம ,மேலே சொன்ன நான்வெஜ் கிரில் ஐட்டத்தையும், நான்வெஜ் க்ரேவி ஐட்டத்தையும்  மட்டும் ஒரு கட்டு கட்டிட்டுப் போனாங்க. ( மின்னலே படத்துல மாதவன் ரீமா சென்னைப் பார்த்து என்ன இப்பிடி சாப்பிடுறே என்று ஆச்சர்யமா வாய் பிளப்பார். அதுக்கு அவங்க செம பசிம்பாங்க.. :) அதே போல பக்கத்துல இருந்தவங்க ( ரெண்டு பேருக்கும் 23, 24 வயசுதான் இருக்கும். )  சாப்பிட்டதைப் பார்த்தே நம்ம வயிறு ரொம்பிரும் போல இருந்தது. ஆனா அவங்க நம்மள லேசா மொறைக்க ஆரம்பிச்சதும் சே சே இது டீசன்ஸி இல்ல. பல்லு இருக்கவங்க பக்கோடா சாப்பிடுறாங்க. ஐ மீன் கறியவும் எலும்பயும்  வெட்டுறாங்கன்னு திரும்பி என் தட்டைப் பார்த்துக் கொறிச்சேன். என்னது இதுதான் கொறிச்சதான்னு கண்ணு வைக்காதீங்க யாரும். :) இங்க லிக்கரும் சாப்பிடலாம்கிறது கூடுதல் தகவல். ஆண் , பெண் யாரா இருந்தாலும் இங்கே சாப்பிடுறாங்க. அதுக்கு தனியா காசு வரிக்கு கொஞ்சம் கப்பம் கட்டணும். நமக்கு அதெல்லாம் பழக்கமில்லைங்கிறதால சாப்பாடை நல்லா ஒரு கட்டு கட்டினோம். அப்புறம் நடையக் கட்டினோம்.

அப்புறம் ராத்திரிக்கு மட்டுமில்ல மறுநாள் கூட பசிக்கலைன்னா பார்த்துக்குங்களேன். !.. :)

9 கருத்துகள் :

Ponniyinselvan/karthikeyan சொன்னது…

உணவு அருந்தினோம் என்பது தவறு. உண்டோம் என்பதே சரியான சொல். பானங்களைதான் அருந்துவோம். அல்லது கஞ்சி, கூழ் போன்றவற்றையே அருந்துவோம்.
கார்த்திக் அம்மா

துளசி கோபால் சொன்னது…

தேனே,

நம்ம தி. நகரிலும் ஒரு பார்பெக்யூ நேஷன் இருக்கேப்பா.

ஸ்கூல் பையன் சொன்னது…

மூன்று வருடங்களுக்கு முன்பு தி.நகரிலுள்ள பார்பிக்யுநேசன் போயிருக்கிறேன். அப்போது அசைவத்துக்கு ரூ.750/- இப்போது எவ்வளவோ?

கீத மஞ்சரி சொன்னது…

அட்டகாசம்! படங்களைப் பார்த்தாலே வயிறு நிறைந்துவிடும்போல் உள்ளது.

Thenammai Lakshmanan சொன்னது…

திருத்திவிட்டேன் நன்றி பொன்னியில் செல்வன்/ கார்த்திக் அம்மா

துளசி டி நகர் போனதில்லை. ஆனால் வைல்ட் அமேசான் போய் இருக்கோம்

அதேதான் ஸ்கூல் பையன். ஞாயிறு என்றால் 850. இது பெங்களூரு ரேட். சென்னையிலும் அப்பிடித்தான் இருக்கும்.

நன்றி கீதா :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Menaga sathia சொன்னது…

சூப்பர்ர்ர் அக்கா,படங்களை பார்க்கும் போதே நாவூறுது..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றிடா மேனகா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...