எனது நூல்கள்.

வியாழன், 6 மார்ச், 2014

புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

புர்ஜ் கலீஃபா .. 828.8 மீ ( 2,722 அடி ) உயரக் கட்டிடம் . துபாயில் இருக்கும் உலகத்திலேயே உயரமான இந்தக் கட்டிடத்தில் ஏறிப்பாத்தாச்சு.

கிட்டத்தட்ட 28 அவார்டுகளை இதன் கட்டிடக்கலை, இண்டீரியர், உயரமான பில்டிங் ( ஸ்கை ஸ்க்ராப்பர்) போன்றவற்றிற்காக வாங்கி இருக்கு. 2004 இல் இருந்து 2009 வரை 5 ஆண்டுகளா கட்டப்பட்டிருக்கு. இதை வடிவமைச்சவர் ஆட்ரியன் ஸ்மித் என்கிற ஆர்க்கிடெக்ட். இதன் டெவலப்பர்  எம்மார் ப்ராப்பர்டீஸ்.இதன் ஸ்ட்ரக்சுரல் இஞ்சினியர் பில் பேக்கர்.

சௌத் கொரியாவைச் சேர்ந்த சாம்சங்க் இஞ்சினியரிங் நிறுவனத்தால் கட்டப்பட்டிருக்கு. இவங்க பெட்ரொனாஸ் மற்றும் தாய்பே ஆகியவற்றைக் கட்டினவங்க. நம் தமிழர்களின் உழைப்பும் இதுல அடங்கி இருக்கு.

200 மாடி, 12, 000 பேர் வேலை செய்திருக்காங்க. 57 எலிவேட்டர், 5 லட்சம் டன் கொண்டது இது. மேலே போகப்போக காத்துல மிதக்குற மாதிரி இருக்கு.

முதலில் புர்ஜ் துபாய்னு பெயரிடப்பட்ட இக்கட்டிடம் அராப் எமிரேட்ஸின் ப்ரசிடண்ட் கலிஃபா பின் ஸாயத் அல் நயன் அவர்களின் பேரை நினைவு கூறும் விதமாக புர்ஜ் கலீஃபா என்று அழைக்கப்படுகிறது.

160 மாடி வரை உபயோகத்தில் உள்ளது. நமக்கு 124 மாடி வரையே செல்ல அனுமதி. அதுக்கே தலையை சுத்துது. ஒரே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தான். ஒரு நிமிஷத்துல லிஃப்ட் கொண்டு விட்டுடுது.

இதுதான் அப்ஷர்வேஷன் டெக். இங்கேவரைதான் பொதுமக்களுக்கு அனுமதி. இங்கே இருந்து நாம் துபாய் ஃபவுண்டன் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். வண்ண விளக்குகளில் நீரூற்றின் நடனம்.ஹைமனோகாலிஸ் பூக்கள் பூத்து இருந்தன.

இதன் விண்டோ க்ளீனிங், ப்ளம்பிங்க், ஏர் கண்டிஷனிங், இதில் இருக்கும் ஹோட்டல் பற்றிய விபரங்கள் , 27 ஏக்கரில் இதைச் சுற்றி இருக்கும் பூங்கா, அதன் நீரோட்டம், நீரூற்று நிகழ்ச்சிகள் , இதன் ரியல் எஸ்டேட் வால்யூ, இது பத்திய விபரங்களை டீடெயிலா படிச்சாலே நமக்கு தலையை சுத்தும். 

இங்கே பேஸ் ஜம்பிங்கும் , க்ளைம்பிங்கும் நடத்த அனுமதிச்சிருக்காங்க. ஜனவரி 4, 2010 ல் இதன் திறப்பு விழா நடந்திருக்கு.

ஒருத்தர் போய்ப் பார்க்க அதிகமில்லை ஜெண்டில் மேன் உடனே போய்ப் பார்க்கணும்னா 400 திர்ஹாம். ( 6800 ரூபாய்தான் !!!). முன்னாடியே புக் பண்ணா 125 திர்ஹாம். ( 2, 125 ).

யம்மா.. உலகத்துலேயே உயரமான பில்டிங்கைப் பார்க்க  என் தம்பி கூட்டிட்டுப் போனான்.  உயரத்துல வேகமா போன காரணத்தால் கொஞ்சம் தலை சுத்தலோட தப்பிச்சேன். நானே போய் டிக்கெட் எடுத்திருந்தா விலையைப் பார்த்து  மயக்கமே போட்டு விழுந்திருப்பேன்.

என் அம்மா, என் தம்பி மாமனார்  , இன்னும் சில உறவினர்களோட போனோம். ஒரே கூட்டம். நாமளும் ஜோதில ஐக்கியமாயிட்டோம்னு ஒரே சந்தோஷமா வந்தோம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்பவே கண்ணைக் கட்டுதே...!

ம்... வாழ்த்துக்கள் சகோதரி...

சே. குமார் சொன்னது…

அழகான கட்டிடம்...
பொருளாதார பிரச்சினை வந்தபின்னர்தான் புர்ஸ் துபாய் என்பது புர்ஸ்கலீபாவானது...
வானளாவ உயர்ந்த கட்டிடம்...
பகிர்வுக்கு நன்றி அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...