எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஜனவரி, 2014

சென்னை அவென்யூவில் பாதாம் அல்வா.

சென்னை அவென்யூவில் பாதாம் அல்வா.

எனது தேனூஸ் ரெசிப்பீஸ் அடிக்கடி சென்னை அவென்யூவில் வெளியாகி வருகிறது.

செப்டம்பர் 1-14, 2013 சென்னை அவென்யூ ஃபோர்ட் நைட்லி இதழில் என்னுடைய பாதாம் அல்வா செய்முறை வெளியாகி இருக்கிறது.

 செய்முறை இங்கே.



////BADAM HALWA :-
NEEDED :-
BADAM - 100 GMS
SUGAR - 200 GRAMS
GHEE - 200 GRAMS.
MILK - 1 LADLE.
KEVRA - FEW STRANDS. ( OPTIONAL)
BELL BRAND YELLOW FOOD COLOUR - 1PINCH


METHOD:-
SOAK THE BADAM IN HOT WATER FOR 2 HOURS. REMOVE THE SKIN AND COARSLY GROUND IT WITH LITTLE MILK. PLACE IT IN A PAN WITH SUGAR. KEEP IT IN STOVE AND STIRR CONTINUOUSLY WITH MEDIUM FIRE. WHEN IT BECOMES THICK AND STICKY TO THE LADLE REMOVE FROM FIRE AND ADD THE MELTED GHEE SLOWLY & STIRRING SIMULTANEOUSLY. STIRR TILL ALL THE GHEE IS ABSORBED. ADD THE SAFFRON STRANDS AND SERVE HOT.

THIS IS A DELICIOUS HALWA AND SERVED AT THE ENGAGEMENTS AND PENN AZAIPPU IN CHETTINAD MARRIAGES .


பாதாம் ஹல்வா;-
தேவையானவை:-
பாதாம் பருப்பு - 100 கி
ஜீனி - 200 கி
நெய் - 200 கி
பால் - 1 கரண்டி
குங்குமப்பூ - சிறிது.
பெல் ப்ராண்ட் யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.

செய்முறை :-
பாதாம் பருப்புக்களை 2 மணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பானில் அரைத்த பாதாம் ., ஜீனி போட்டு மிதமான தீயில் கிளறவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் கரண்டியில் திரண்டு ஒட்டிக் கொள்ளும் போது அடுப்பை அணைத்து பானை கீழே இறக்கி வைக்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கை விடாமல் கிளறவும். மொத்த நெய்யும் உறிஞ்சப்பட்டபின் தொட்டால் கையில் அல்வா ஒட்டாது. குங்குமப்பூவை போட்டு சூடாக அல்வாவை பரிமாறவும்.

இது மிக சுவையான அல்வா. செட்டிநாட்டில் திருமணம் பேசி முடித்துக் கொள்ளும் போதும்., பெண் அழைப்பின் போதும் இது பரிமாறப்படும்///

டிஸ்கி:- இந்த ரெசிப்பி என் தேனூஸ் ரெசிப்பீஸ் என்ற சமையல் வலைத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.

http://thenoos.blogspot.in/2011/07/badam-halwa.html . இந்த இணைப்பில் பார்க்கவும்.


9 கருத்துகள்:

  1. ஆகா...! சுவையான அல்வா... செய்முறைக்கு நன்றி சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப எளிமையா இருக்கே ! ஆனா டேஸ்டி.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா, அருமை. நாக்கில் நீர், நீ ர் வரவழைத்து விட்டீர்கள் ! ;)

    பதிலளிநீக்கு
  5. பாதாம் ஹல்வா ஒரு டப்பா பார்சேல்&ன்னு கமெண்ட் போட்டா அடிக்கவர மாட்டீங்களே சிஸ்? ஹி... ஹி...! படத்தைப் பார்த்து படிச்சதும் அதத்தான் சொல்லத் தோணிச்சு!

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஆதி

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி மேனகா

    நன்றி மாணிக்கம்

    நன்றி வைகோ சார்

    நன்றி பாலா

    நன்றி ஆசியா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...