ஞாயிறு, 26 ஜனவரி, 2014

குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)

இந்த வருடம் பெங்களூரு-- KSDH - KARNATAKA STATE DEPARTMENT OF   HORTICULTURE ( கர்நாடகா தோட்டக்கலை  துறை ) தனது 50 ஆவது வருடத்தைக் கொண்டாடுகிறது. எனவே ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருந்தது.


ஜனவரி 17 இல் இருந்து குடியரசு தினம் வரை  லால் பாகில் காய்கறிகளை மலர்களால் உருவாக்கிக் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. லால் பாகின் உள்ளே செல்லும் நான்கு வழிப் பாதைகளிலும் கூட்டமான கூட்டம்.

கிட்டத்தட்ட 240 ஏக்கர் நிலத்தில் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் லால் பாகுக்குச் செல்லவே இரண்டு மணி நேரம் ஆகிறது. சென்ற வாரம் என் அன்ன பட்சி புத்தக வெளியீட்டுக்குத் தகுந்த சமயத்தில் செல்ல இயலாமல் டபுள் டக்கர் ட்ரெயினைத் தவறவிட்டதும் நடந்தது. இன்றும் அப்படித்தான்.

வழியெங்கும் காய்கறிகள் கொத்துக் கொத்தாகக் காய்த்துக் கிடக்க, கண்ணாடிக் குடிலுக்குள்   ஒரு பெரும் தூண் பெங்களூர் தோட்டக்கலைத் துறையின் 50 ஆவது பிறந்தநாளுக்குக் கட்டியம் கூறியபடி நின்றிருந்தது.

அதன் பக்கங்களில் எல்லாம் GARLIC, COCONUT, CARROT, BANANA, PINEAPPLE, MUSHROOM, MANGO, CASHEW APPLE, POMEGRANATE, ஆகிய காய்கள் எல்லாவற்றையும் ரோஜாப்பூக்களாலும் பிற பூக்களாலுமே வடிவமைத்திருந்தார்கள்.

விதம் விதமான கத்திரிக்காய், புடலங்காய், பூசணி, பரங்கி, தக்காளி, முருங்கை, பப்பாளி, பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் , பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய், குட மிளகாய், வாழைமரம், கீரை வகைகள், மூலிகைகள் அனைத்தையுமே தொட்டிச் செடிகளில் வளர்த்துக் காண்பித்து இருந்தார்கள்.

புடலங்காய்களைப் பறித்து பச்சையாகத் தின்றுவிடலாம் போல அழகு.

ஒரு பெண் சிலையும் ஆண் சிலையும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது புதிதாய். இருவருமே பாரம்பரிய கன்னட கிராமத்து விவசாயிகளை நினைவுபடுத்தினார்கள்.

குழந்தைகள் விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காகக் காய்கறிகளைக் கார்ட்டூன் காரெக்டர்கள் ஷேப்பில் வடிவமைத்திருந்தது அழகு.

சென்று வந்தவுடன் கண்ணுக்குள் எல்லாம் பச்சைப் பசேலென்று நிரம்பிக் கிடந்த காய்கறிகள், கீரைகளின் மகத்துவம் புரிந்தது போல் இருந்தது.

ஒவ்வொரு வருடமும் 4 லட்சம் விசிட்டர்கள் வருகிறார்களாம். குழந்தைகளுக்குப் பத்து ரூபாயும், பெரியவர்களுக்கு 40 ரூபாயும் நுழைவுக்கட்டணம்.

பூங்காவுக்குள் பழத் துண்டுகளும் , பழச்சாறும்  ஒரு மாதிரி கொரகொரப்பான பொரியுமே கிடைக்கும். நம்மூரு போல பட்டாணி, கடலை எல்லாம் கிடையாது.  

வருடம் இரு முறை சுதந்திர தினத்தில் மலர்க் கண்காட்சியும் , குடியரசு தினத்தில் காய்கறி உருவத்தில் மலர்க் கண்காட்சியும் நடத்தி மக்களுக்கு மலர்கள் மற்றும் காய்கறி உணவின் மகத்துவத்தைப் புரிய வைக்க கர்நாடகா தோட்டக்கலைத் துறை எடுத்த முயற்சி பாராட்டற்குரியது. 

50 வருடத்தைச் சிறப்பாகக் கொண்டாடும்  கர்நாடகா மாநிலத்தின் தோட்டக்கலைத் துறைக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

டிஸ்கி :- இதையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.


6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா... என்னவொரு கற்பனை திறன் + கைவண்ணம்...

நன்றி... குடியரசு தின வாழ்த்துக்கள்...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

எல்லாமே அழகு. பெங்களூர்க்காரங்க கொடுத்து வெச்சவங்க ;-)

ராஜி சொன்னது…

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான கவரேஜ். இந்த முறை செல்லவில்லை. உங்கள் படங்களில் பார்த்துக் கொண்டேன்:)!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி சாந்தி .ஏன் மும்பைக்காரங்களும் கொடுத்துவச்சவங்கதாண்டா

நன்றி ராஜி

நன்றி ராமலெக்ஷ்மி. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...