எனது நூல்கள்.

வியாழன், 26 டிசம்பர், 2013

அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,

துபாய் சென்றிருந்தபோது அங்கே கிடைத்த உணவு வகைகள் இவை. இவற்றில் ஷவர்மா இங்கே பெங்களூருவில் கிடைத்தாலும் துபாயில் லெபனீஸ் கடையில் விதம் விதமான சாஸ்களோடு சாப்பிட்ட அரபிக்  ஷவர்மாதான் சூப்பர்.


கோதுமை ரொட்டி போல இருக்கும் இதனுள்ளே மயோனிஸில் வைத்த காய்கறிக் கலவையும், வினிகர் தெளித்து, லேயர் லேயராகச் சுட்ட கோழிக் கறியும் அடுக்கி பட்டர் பேப்பர் அல்லது டிஷ்யூவில் சுற்றிக் கொடுக்கிறார்கள்.

இதை யஹலா  ரெஸ்டாரெண்டின் உள்ளே சென்று ஒரு லெபனீஸ் சமையற்காரர் பட்டாக் கத்தி கொண்டு ஓவியம் போலத் தீட்டியதைச் சுட்டோம்.

நிறைய வெளிநாட்டினர் சாலட்களோடு  ஷவர்மா சாப்பிட்டு அரபிக் காஃபியையும்  அருந்திக் கொண்டிருந்தார்கள்.

குப்பூஸ் பக்கத்தில் லூலூ ஷாப்பில் கிடைக்கிறது. 5 குப்பூஸ் கொண்ட பாக்கெட் ஒரு திர்ஹாம்தான். இதற்குத் தொட்டுக் கொள்ள குருமா, சிக்கன் க்ரேவி எனப் பலது இருந்தாலும் என் தம்பி குழந்தைகள் ஹலுவா என்ற ஒரு இனிப்பைத் தொட்டுச் சாப்பிட்டார்கள். அது வெள்ளை எள் + சீனி கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு  மாவு போலிருந்தது.

ஃபிலாஃபில் ஒரு மாதிரி வடை போல. நம்மூரு வாழைப்பூ வடை போல ரொம்பச் சுவை. இதற்கு வயலட் கலர் முட்டைக் கோஸும் மயனீஸும்
தொட்டுக் கொள்ளக் கொடுக்கிறார்கள். அநேக பதார்த்தங்களில் வெள்ளை எள் சேர்த்திருக்கிறது. ப்ரெட்களிலும் கூட எள்ளைத் தூவி வைத்திருக்கிறார்கள். பாலைப் பிரதேசம் என்பதால் வெள்ளை எள் அதிகம் சேர்ப்பார்கள் போலிருக்கிறது.

இவ்வளவு பொருட்களையும் நாம் தேடித் தேடிச் சென்று சாப்பிட்டுப் பார்க்க அங்கே விடியற்காலையில் ( அதாவது 10 மணிக்குங்க ) எழுந்து மக்கள் அனைவரும் ஓடி வந்து நம்மூரு தோசையையும் ஊத்தப்பத்தையும்  ( பாக்கெட்டில் பிஸா போல ஒட்டி இருக்கிறது, சட்னி சாம்பார் சாஷே அல்லது சின்ன கப்களில் ) வாங்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மைக்ரோவேவ்பின்னே  எதுக்கு இருக்காம். இதுபோல வாங்கிச் செல்வதை சுடவைத்துத் தின்னத்தானே... என்ன சொல்லுங்க நம்ம ஊரு இட்லி தோசைக்கு ஈடு இணை உண்டா.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


5 கருத்துகள் :

Asiya Omar சொன்னது…

ஆஹா ! சூப்பர் தேனக்கா, அசத்திட்டீங்க.

சே. குமார் சொன்னது…

துபாய்க்கு வந்தது சவர்மா சாப்பிட்டதை பதிவாக்கிட்டீங்க அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆசியா

ஆமாம் குமார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த ஷவர்மா, அரபி தேசங்களில் இருக்கும் சுவை வேறு எங்குமே கிடையாது, அது கேரளாவில் இருந்தாலும் இந்த ருசிக்கு நிகரில்லை...இது கூட தஹினான்னு ஒரு சாசும் வைப்பாங்க, வெள்ளையாக இருக்கும் அது ஹார்ட்டுக்கு மிகவும் நல்லது, நேச்சுரல் சாப்பாடு, இதை விட்டுட்டுதான் இங்கே பர்கர், மெக்டொனால்ட், கே எஃ சின்னு அலையுதுங்க.

இன்னிக்கு கண்டிப்பா ஷவர்மா சாப்பிட்டே ஆகணும்னு நினைவு படுத்திட்டீங்க சாப்புட்ருவோம்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...