எனது பதிமூன்று நூல்கள்

புதன், 25 டிசம்பர், 2013

வித்யாரண்யபுராவில் காளிகா துர்க்கை.

பெங்களூருவில் இருக்கும் மிக அற்புதமான கோயில்களில் ஒன்று வித்யாரண்யபுராவில் இருக்கும். காளிகா துர்க்கா பரமேஸ்வரி கோயில். போய் இறங்கியதும் தெரியவில்லை, இவ்வளவு பெரிய கோயிலாக இருக்கும் என்று.


மரங்கள் சூழ்ந்து இருக்கும் சோலையில் திடீரென்று மரங்கள் விலக விண்ணைத் தொடும் அந்த 108 அடி கோபுரமும்,  தமிழக பாணிக் கோயிலும் காணக் கண்கோடி வேண்டும்.

1988 இல் ராமு சாஸ்த்ரி என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு உள்ளே சென்றவுடன் வலிமையான ஒரு சக்தியின் ஆட்சிக்கும் ப்ரேமைக்கும் நாம் ஆட்படுகிறோம்.

ஆயிரங்கண் போதாது அவளின் அழகையும் எழிலையும் காண. அந்தச் சின்னஞ்சிறு துர்க்கை மிகப் பெரும் பேரெழில் அரசியாக பிரம்மாண்ட ரூபியாக இன்னும் கண்மணிகளுக்குள் அமர்ந்திருக்கிறாள்.

சக்தி பீடமும்  நவ துர்க்கையும் கொண்ட சந்நிதியும், காளியும், நவராத்திரி கொலுவும், நவராத்திரி உலாப் போன துர்க்கையும் என பேரழகு கொட்டிக் கிடக்கும் கோயில் அது. இன்னும் மஹா கணபதி, நர்த்தக கிருஷ்ணா, சுப்ரமண்ய சுவாமி, நரசிம்ம சுவாமி, விஜய துர்க்கா, சனீஸ்வரன், ஜோடியுடன் இருக்கும் நவக்கிரகங்கள் என அருளும் அழகும் ஆன்மீக சக்தியும் நிரம்பிய தேஜசான கோயில் அது.

உள்ளே செல்லும்போது கொண்டு சென்ற அனைத்தையும்  தீர்த்து புதுச் சக்தியை உடம்பிலும் மனத்திலும் மூளையிலும் ஏற்றி அனுப்புகிறாள் காளிகா துர்க்கா. வெற்றித் தெய்வம் கொற்றவையை அவள் அருளாலே சென்று அவள்தாள் வணங்கித் தரிசனம் செய்து திரும்பினோம்.:)4 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகான கோவில். இதுவரை சென்றதில்லை. நல்ல பகிர்வு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

minnal nagaraj சொன்னது…

ஆம் மிகவும் அருமையான கோவில் ...வாரவாரம் மற்றும் மன அமைதிஇல்லா நாட்களிலும் இங்கு செல்வோம் .எங்களை வாழ வைக்கும் தெய்வம் ...தினமும் அன்னதானம் நடக்கும் ..ஏராளமான பக்த்தர்கள் அரிசி நன்கொடையாய் அளிக்கிறார்கள்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...