எனது நூல்கள்.

வியாழன், 21 நவம்பர், 2013

துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

தமிழகத்தில் இருந்தபோது கூட ஸ்கந்தர் சஷ்டியில் முருகனைத் தரிசித்ததில்லை. துபாய் சென்றிருந்த போது ஸ்கந்தர் சஷ்டியில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. என் அன்பு சகோதரன் மெய்யப்பன் சபாரெத்தினம் ஸ்கந்தர் சஷ்டி விழா நடந்த எமிரேட்ஸ் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.


அங்கே இரு நாட்கள் நடைபெற்ற அந்த வைபவம் மிகக் கோலாகலமாக இருந்தது.

தமிழர் மட்டுமில்லை, கேரளத்தவர், தெலுங்கர், கன்னடர்,வடநாட்டவர் என அனைத்து இந்தியமக்களும், ஆன்மீக பக்தர்களும் குழுமி இருந்தார்கள்.

கோயிலைப் போல ஸ்தாபிக்கப்பட்டு கருவறை போல நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது ஹாலில். வெளியே  யாக சாலையும் இருந்தது.

பக்கத்தில் சூரசம்ஹாரத்துக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

துபாய் நகரப் பெண்கள் இசையில் முருகனைப் பணிந்து பாடிக் கொண்டிருந்தார்கள். அற்புத அனுபவம்.

மறுநாள் குழந்தைகள் அறுபடை வீட்டுக்கும் ஆறு குழுக்களாகப் பிரிந்து மேடையேறி அறுபடை வீட்டைப் பற்றியும் திருப்புகழில் இருந்து  6, 6 பாடல்கள் பாடினார்கள். தெய்வீக இசை அனுபவம். திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் அல்லவா. செவியும் இனித்தது.

மிகப் பெரும் பாடகிகள் போலச் சில குழந்தைகள் பாடினார்கள். வயலின்
இசைத்தார்கள். முழுக் குழுவும் மிக லயத்தோடு பாடியது அருமை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்

“ சரவணபவ என்பது ஆறெழுத்து மந்திரம்
ஆறுமுகம் என்பது ஐந்தெழுத்து மந்திரம்
கந்தன் என்பது நான்கெழுத்து மந்திரம்
முருகா என்பது மூன்றெழுத்து மந்திரம்
வேலா என்பது இரண்டெழுத்து மந்திரம்
ஓம் என்பது ஓரெழுத்து மந்திரம். “

என்ற பாடலும்,

“முத்தைத் தரு பத்தித் திருநகை “ என்ற அருணகிரிநாதரின் திருப்புகழும் அமிர்தம். பாடிய குழந்தைகளுக்கும் பாடல் பயிற்றுவித்த ஆசிரியைகளுக்கும் வந்தனம். இசையால் அன்று இறைவனை அடைந்தோம்.

கரகாட்டம், காவடி மற்றும் பெண் குழந்தைகளின் நடனமும் நடைபெற்றது.

சூரசம்ஹாரமும் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது.  நீர்மோரும், பானகமும் வழங்கப்பட்டது. உணவும் இருப்பதாகக் கூறினார்கள். நாம் வீட்லயும் விசேஷங்க என்று கூறி விடை பெற்றோம்.

முருகனும்  தெய்வானையும் குட்டிக் குழந்தைகளாக வந்திருந்தார்கள்.

இவ்வளவையும் தன் பொறுப்பாக ஏற்று சிறப்பாக நடத்தியவர் அங்கே பர்துபாயில் பூக்கடை வைத்திருக்கும் பெருமாள் என்று கூறினார்கள். தாங்கள் இருக்கும் ஊரையும் அறுபடை முருகன் ஸ்தலங்களாய் ஆக்கிய அவருக்கும் துபாய் ஆன்மீகப் பெருமக்களுக்கும் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


13 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"முத்தைத் தரு பத்தித் திருநகை" பாடுவதற்கு மிகவும் சிரமமான பாடல்... பயிற்றுவித்த ஆசிரியைகளுக்கு பாராட்டுக்கள்...

அழகிய படங்கள்... அருமையான விளக்கங்கள்...

sury Siva சொன்னது…

துபாய்க்கு சென்று முருகனை தரிசித்த திருப்தியை அளித்து விட்டீர்கள். நன்றி.

இந்த ரிலிஜியஸ் ப்ரீடம் மற்ற அரபு நாடுகளில் இல்லை என நினைக்கிறேன்.

சரவண பவ என்பது ஆறு எழுத்து மந்திரம். அந்த பாடலை வீடியோ அல்லது ஆடியோ எடுத்து வந்திருந்தால் போடவும்.

எதற்கும் நானே பாடிவிட்டேன்.

சுப்பு தாத்தா.

Asiya Omar சொன்னது…

ஆச்சரியமாய் இருக்கு அக்கா, இந்த ஸ்கூல் என் குழந்தைகள் நாங்க துபாய் வந்த புதில் 2000 சேர்த்த ஸ்கூல்,ஒரு வருடம் மட்டுமே அங்கு படித்தார்கள்,பின்பு இந்தியா வந்துவிட்டோம்.அதன் பின்பு அபுதாபி. கிட்டதட்ட 40 வருடம் பழமையான நல்ல ஸ்கூல்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

அரபு நாட்டில் இப்படியும் ஒரு விழா...சிறப்பாக... தமிழன் எங்கு இருப்பான் அங்கு.. சிறப்பும் இருக்கும் பதிவும் படங்களும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Senthilkumar Nallappan சொன்னது…

கடைசியில் வெற்றிடம.ஒன்றும் இல்லை.அதுவே இறைவன்.

SAKTHI SHENBAGARAJ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
SAKTHI SHENBAGARAJ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
SAKTHI SHENBAGARAJ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி சுப்பு சார். கேட்டேன். அருமையாகப் பாடி இருக்கீங்க. !!!

நன்றி ஆசியா

நன்றி ரூபன்

நன்றி செந்தில்

நன்றி சக்தி செண்பகராஜ் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Manickam sattanathan சொன்னது…

இது ஒரு அற்புதமான நிகழ்வு. பாராட்டுக்கள். சொந்த நாட்டில் கூட பள்ளி பிள்ளைகளுக்கு சூர சம்காரம் , ஆறுபடை வீடு இவைகள் பற்றி அறிய வாய்ப்பில்லை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மாணிக்கம்.

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் மாணிக்கம் சட்டநாதன். :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...