எனது நூல்கள்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

வருடா வருடம் கொலுவுக்கு அழைப்பு வரும். சென்று ஒரு சாமிப் பாட்டைப் பாடிவிட்டு குங்குமம் வாங்கி வருவது வழக்கம். அது ஏனோ நகரத்தார் குடும்பங்களில் கொலு வைப்பதில்லை. எனவே அக்கம் பக்கம் இருக்கும் பிராமணத் தோழிகள் வீட்டில் வைக்கும் கொலுவுக்கு அழைப்பு வந்தால் கட்டாயம் போவேன். பெண்களை வணங்கும் திருவிழா என்பதால் மிகப்பிடிக்கும்.

சென்னையில் இருக்கும்போது நண்பர் அருண் வீட்டில் அவரது அம்மா வைக்கும் பிரம்மாண்ட கொலுவைப் பார்த்து அசந்ததுண்டு. தங்கை கயலுடன் இரு முறை அவர் வீட்டு கொலுவுக்குச் சென்று வந்திருக்கிறேன்.


9 படிகளில் வைக்கப்படும் கொலு சில இடங்களில் 3 படிகள் அல்லது 5 படிகளோடு கூட இருக்கும். இடத்தின் சுருக்கம் மேலும் பொம்மைகளின் அளவு கருதி அப்படி வைக்கப்பட்டிருக்கலாம். இது கும்பகோணத்தில் ஒரு தோழியின் வீட்டில் எடுத்தது. எல்லா கொலுவிலும் மரப்பாச்சியும், செட்டியார் பொம்மைகளும், முளைவிட்ட பயிர்களும் ( முளைப்பாரி)  கட்டாயம் இடம் பெறும்.

கொலுவில் ஓரறிவு உயிரினத்திலிருந்து ஆறறிவு பெற்ற மனிதன், அவனுக்கு மேலே தெய்வங்கள் என மூன்று மூன்று படிகளாக அமைக்கப்பட்டிருக்கும். என் பெரியம்மா பெண், என் சின்ன மாமியாரின் மூத்த மருமகள், முகநூல் தோழி  அழகு மீனாக்ஷி சேனா, ( இவரது கொலுவை புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன் .) ஆகியோர் மட்டுமே கொலு வைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

காரைக்குடியில் கிருஷ்ணன் கோயிலில் கொலு வைப்பார்கள். பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் கொலு வைப்பார்கள். மேலும் சாமியையும் 9 நாட்களும் 9 வித அலங்காரத்தில் எழுந்தருளப் பண்ணுவார்கள். முதல் நாள் ராஜேஸ்வரி, இரண்டாம் நாள் சமயபுரம் மாரியம்மன், மூன்றாம் நாள் அம்மன் சிவபூஜை செய்தல், நான்காம் நாம் ஆதி பராசக்தி, ஐந்தாம் நாள் அர்த்தநாரீஸ்வரர், ஆறாம் நாள் மதுரை மீனாக்ஷி, ஏழாம் நாள் மஹா லெக்ஷ்மி, எட்டாம் நாள் மஹிஷாசுரமர்த்தினி, ஒன்பதாம் நாள் மஹா சரஸ்வதி ஆகிய அலங்காரங்கள் செய்யப்படுவதுண்டு.

456.மகர்நோன்புப் பொட்டல் என்று ஒரு திடல் உண்டு. அதில் நவராத்திரி சமயம் சாமியும் அம்மனும் அம்பு போட என்று நான்கு 457. தேர்நிலைகள் போல அமைக்கப்பட்டிருக்கும்.

திருக்கோயிலூரில் கோயில் கொண்டிருக்கும் திருநெல்லையம்மனுக்கு 458.மகர்நோன்பு மண்டகப்படிகள் 9 நாட்கள் நடைபெறும். அதன் பின் அம்மனை காரைக்குடி பழைய டாக்ஸி ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் மகர்நோன்பு மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கே ஊரோடு அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.

அங்கே மக்களனைவரும் 459.மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்து வணங்கியவுடன் குதிரை வாகனத்தில்  அம்மனை மகர்நோன்புத் திடலுக்கு உலா வரச் செய்து  460. அம்பு போடுதல் நடக்கும். அங்கே கட்டியுள்ள வாழைமரத்தில் அம்பை அர்ச்சகர் அம்மன் , சாமி சார்பாகப் போடுவார். இதற்காக நுனியில் இரும்பால் அம்பு செய்து உருண்டையான மரக்குச்சியில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த அம்பை எடுத்து வீட்டில் வைத்தால் நன்மை என்பதால் அதை எடுக்கப் பலத்த கூட்டமே இருக்கும்.

தாய்க்குத் தலைமகன் அம்பு போடுதல் விசேஷம். ஆயாவீட்டில் பிள்ளை பிறக்கும்போது செய்து கொடுத்த வெள்ளி அம்பை ஆண் குழந்தை கையில் கொடுத்து சாமி அம்பு போட்டதும், கைக்குழந்தையாயிருந்தால் கையைப் பிடித்து அம்பை வாழை மரத்தில் குத்துவார்கள் வீட்டுப் பெரியவர்கள்.

என் ஐயா தன் நண்பர் ஒருவரிடம் நான் சின்னப் பிள்ளையாய் இருந்த போது விசாரித்தது அடிக்கடி என் ஞாபகத்துக்கு வரும். “ என்னப்பா, தாய்க்குத் தலைமகன், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு கசாப்புக் குழம்பு சாப்பிட்டு அம்பு போடப் போகலையா ?”  என்று.

மகர்நோன்புப் பொட்டல்.
நன்மைகள் அம்பாளின் ரூபமாகவும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறியாமை, காமம், க்ரோதம், லோபம் அனைத்தும் தீமையின் ரூபமாகவும் கருதி அவை நம்மை விட்டு விலகவேண்டும் என்பதே அம்பு போடுதலின் நோக்கமாகும். இது புராணகாலத்தில் அம்மனுடன் போர் செய்த அரக்கர்களை வதம் செய்யும் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் முகமாக தீமை அழிந்து நன்மை வென்றதன் காரணியாக நடைபெறுகிறது.

இது சென்ற வருடம் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் குதிரை வாகனத்தில் ( அன்று சதயத் திருநாள் விழாவும் இருந்தது.) அம்பு போட்டபோது எடுத்தது.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த பழக்க வழக்கங்களை அறிந்தேன்...

வாழ்த்துக்கள் சகோதரி...

sury Siva சொன்னது…

எங்கள் ஊர் அம்பாள் குதிரை வாஹனக் காட்சி
கண்டு பிரமித்தேன்.
மனம் மகிழ்ந்தேன்.

நேரம் கிடைத்தால் எங்கள் வீட்டு கொலுவுக்கும் வாருங்கள்.

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
www.menakasury.blogspot.com

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி சுப்பு சார். நிச்சயம்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Palani Chamy சொன்னது…

நான் பவான்குடியில் வசித்தேன் (காரைக்குடிஅருகே)பலவான்குடியில் செட்டியார் வீடு களில் கொலு வைப்பார்களே.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...