வியாழன், 17 அக்டோபர், 2013

உப்பிலியப்பன் கோயிலில் சிரவணம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதாமாதம் சிரவணம் என்ற விழா பிரசித்தம். சிறப்பு என்னன்னா 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ'( என்னை சரணைந்தால் உன்னை நான் காப்பேன்). என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.


தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் - ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார்.

சென்ற விஜயதசமியன்று சிரவணம் காணும் வாய்ப்புப் பெற்றேன். புரட்டாசி அல்லது பங்குனி  ரொம்ப விசேஷம்.

உப்பிலியப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம்.  பெருமாளுக்கு நெய் தீபம் பிரகாரமாக எடுத்துச் செல்லப்படுகிறது. என் கணவரின் அலுவலக நண்பர் திரு . ரவிச்சந்திரன் அவர்கள் குடும்பம்தான் இங்கே பரம்பரை பரம்பரையாக மாதா மாதம் சிரவணத்தன்று நெய் தீபம்  எடுத்துச் செல்கிறார்கள். 

/////
Every month, Sravanam day is celebrated in a grand manner in this temple, when thousands of devotees congregate and worship the Lord. The Sravana Deepam function, Which is held at about 11 a.m. on that day is a big event that atracts pilgrims from all over the country and abroad. Taking only saltless food on that day is regarded as Sravana Vratam.
Nammazhvar exclaims in his verse, singing the glory of this Lord, that he has no equal and so, the deity here is called "Oppiliappan".
The Pushkarini (Temple Tank) here is known as "Ahoratra Pushkarini", meaning that bathing is specially permissible here, both during day and night. The vimana, meaning " pure happiness ".
The Lord here graciously grants all desires of His devotees, like long life, sound health, abundant wealth, successful marriage and pleasing progeny. As a token of their abundant gratitude to the beneolent Lord, the devotees offer several things in cash or kind and conduct various prarthana festivals.////

////புரட்டாசி அல்லது பங்குனி சிரவண தினத்தன்று இங்குள்ள புஷ்கரணியில் நீராடி, பரந்தாமனை சேவித்து, தான தர்மங்கள் செய்பவர் பெரும் பாவம் போக்குகின்றார். இத் தலம் வந்து "துளஸீவநம்" என சொன்னாலே பாவங்கள் அனைத்தும் தீர்கின்றது.

சிரவண விரதமும், பிரார்த்தனை துலாபாரமும்

ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாட்களில் பகல் 11.00 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம். இத் திருநாட்களில் உண்ணா நோன்பிருந்து, நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்து பின்னர் அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இவ் விரதத்தை சிரவண நாட்களில் தங்களது வீட்டிலும் கடைபிடிக்கலாம். கேரள குருவாயூரை போன்று இங்கும் பிரார்த்தனை துலாபாரம் உள்ளது. பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் ( உப்பு தவிர ) இங்கு காணிக்கை செலுத்தலாம். தமிழக வைணவ தலங்களுல் இது முதலாவது. ./////

உப்பிலியப்பனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத உணவையே பிரசாதமாக உண்டு வந்தோம்.பூமி நாச்சியார்  பகவானுக்கு சமைக்கும்போது உப்புப் போட மறந்துவிட்டதால் பெருமாள் உப்பில்லாமலே படைப்பதாக  ஐதீகம்.

////காதால் கேட்டுக் கொள்வதைக் கீழ்ப்படிதலுடன் நடத்திக் காட்டுவதற்காகவே ச்ரவணம் செய்வதான சுச்ரூஷை, இதன் இணைபிரியாத அங்கமாக உண்டாகும் பணிவு, அதிலிருந்து உண்டாகும் பணிவிடைப் பணி என்று முறையாகத் தொடர்ந்து போகிறது.////

தந்தை தாயைத் துலாபாரமாகச் சுமந்து பணிவிடை செய்த சிரவணன் ஞாபகம் வருகிறது.

////ஸந்நியாத்துடன் மஹாவாக்ய உபதேசம். அதைப் பெற்றுக் கொள்வதே ச்ரவணம்.

”அது நீ, நான் பிரம்மம் ” முதலிய மகா வாக்கியத்தின் தத்துவத்தை அறியும் நோக்கத்துடன் குருவிடம் கேட்டறிதல் சிரவணம் எனப்படுகிறது. ( பைங்கள உபநிடதம் )/////

டிஸ்கி:- வெவ்வேறு வலைப்பக்கங்களில் இருந்து எடுத்த தகவல்களையும் நான் எடுத்த புகைப்படங்களோடு சேர்த்துத் தொகுத்து அளித்துள்ளேன். நன்றி. 

7 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கோயில்... தொகுத்து தந்தமைக்கு நன்றி சகோதரி...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான படங்களுடன், கோயிலைப்பற்றிய அழகான விபரங்கள். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//உப்பிலியப்பனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத உணவையே பிரசாதமாக உண்டு வந்தோம். பூமி நாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புப் போட மறந்துவிட்டதால் பெருமாள் உப்பில்லாமலே படைப்பதாக ஐதீகம். //

பிரஸாதத்தில் உப்பு இல்லாவிட்டாலும், இந்தப்பதிவு மிகவும் ருசியாகவே உள்ளது. ;)

சே. குமார் சொன்னது…

அருமையான படங்களுடன் அழகான பகிர்வு.
வாழ்த்துக்கள் அக்கா...

Pebble சொன்னது…

//
உப்பிலியப்பனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத உணவையே பிரசாதமாக உண்டு வந்தோம்.பூமி நாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புப் போட மறந்துவிட்டதால் பெருமாள் உப்பில்லாமலே படைப்பதாக ஐதீகம்.
//
இதை பற்றி பள்ளிக்கூடத்தில் தமிழ் பாடத்தில் படித்தாக ஞாபகம். அந்தப் பாடத்தில் "சித்தன்னாவாசல், ஓசி" போன்ற சொற்களின் விளக்கத்தோடு கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் பற்றிய விளக்கத்தில் "ஒப்பிலியப்பன் (ஒப்பு இல்லா அப்பன்) என்பது மருவி உப்பிலியப்பன் ஆகி அதுவே உப்பு இல்ல நெய்வேத்தியம் செய்ய காரணமாகி விட்டது என்று குறிப்பிட்டு இருந்தது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி வைகோ சார்

நன்றி குமார்

நன்றி Pebble. தகவலுக்கும் நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...