புதன், 16 அக்டோபர், 2013

ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதமாகும். செட்டிநாட்டுப் பக்கங்களில் ஒரு சாரார் புரட்டாசி விரதமும், சிலர் கார்த்திகை விரதமும் கடைப்பிடிப்பார்கள்.

சிவ கோத்திரத்தைச் சார்ந்த இவர்களில் பெருமாளை வணங்குபவர்கள்  புரட்டாசி மாதம் விரதம் இருந்து காலையில் நீராடி பெருமாளை வணங்கி அன்றே செய்த உணவை வாழை இலையில் உண்பார்கள். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி  உணவு படைத்துவிட்டு சொந்தங்கள், உறவினர்கள் ஆகியோரோடு உணவருந்துவார்கள்.


கார்த்திகை மாதக்காரர்கள் கார்த்திகை மாதத்தில்  திங்கட்கிழமைகளில் முருகப் பெருமானை வணங்கி உணவு படைத்து ஊரோடு உணவிட்டு தாமும் உண்டு மகிழ்வார்கள்.

புரட்டாசி மாதக்காரர்களுக்கு மூன்றாவது சனிக்கிழமையும், கார்த்திகை மாதக்காரர்களுக்கும் மூன்றாவது சோம வாரமும் விசேஷம். நாமம் அணிவதில்லை என்றாலும் விபூதி தரித்துக் கொள்வார்கள்.

முருகனை வணங்குபவர்கள், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், பழமுதிர் சோலை, சுவாமிமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், பழனி , மருதமலை, ஸ்கந்தபுரி , சிறுவாபுரி ஆகிய கோயில்களுக்குச் சென்று வணங்கி வருவார்கள்.

பெருமாளை வணங்குபவர்கள் அரியக்குடி, திருப்பதி, தென் திருப்பதி, காரமடை , திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோவை பெரிய நாயக்கன் பாளையம் பெருமாள், தில்லி வைகுண்டநாதர், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி, கும்பகோணம் சாரங்கபாணி, சக்ரபாணி, சிதம்பரம் பெருமாள், ஸ்ரீரங்கம் பெருமாள்  மற்றும் 108 வைணவத் தலங்கள்,  இன்னும் அருகே உள்ள பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசிப்பது வழக்கம்.

கார்த்திகை மாதம் முருகன் கவசங்கள் பாமாலைகள், பாடுவார்கள். அதே போல அவரவர் வீட்டிலும் புரட்டாசி மாதங்களில் ராமாயணம் பாராயணம் செய்வதுண்டு. இதற்கு ராமாயணம் படித்தல் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட 8 , 10 தலைமுறைகளாக ராமாயணத்தைப் படிப்பவர்களும் உண்டு. புரட்டாசி மாதம் ஒரு நன்னாளில் ராமாயணத்தைப் படிக்கத் துவங்குகிறார்கள். ஒரு வாரம், 9 நாட்களில் தினம் 2 மணி நேரம் வீதம் பாராயணம் செய்யப்படுகிறது. முடிவில் இராமர் பட்டாபிஷேகத்தோடு முடிக்கப்படுகின்றது.

உறவினர் ஒருவர் வீட்டில் ராமாயணம் படிப்பதால் அழைத்திருந்தார்கள். 6 காண்டங்களையும் முன்பே அவர்கள் தினம் படித்து விட்டதால் விஜயதசமியன்று ராமர் பட்டாபிஷேகப் படத்தைப் பிரதிஷ்டை செய்து பூமாலைகள் சாற்றி  அக்காரவடிசல், வடை, சுண்டல்,  நிவேதனம் செய்து ராமர் பட்டாபிஷேகத்தைப் படித்து தீப தூப ஆராதனை காட்டினார்கள். விஜயதசமியும் வேறு. எந்த நல்ல நாள் என்றாலும்  கத்திரிக்காய் வாழைக்காய் சமைத்துப் பாசிப்பருப்பு மசித்துப் பாயாசம் வைத்து நிவேதிப்பது செட்டிநாட்டின் வழக்கம்.

இன்னொரு உறவினர் வீட்டில் தாமரை மலர்களாலேயே அலங்கரிப்பார்கள். அங்கே ஊரோடு அனைவரும் கோவிலுக்குப் போவது போல அர்ச்சனைச் சாமான்களோடு வருவார்கள். அங்கே ராமாயணம் படிக்கப்பட்டு ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் அனைவரது தேங்காய்களையும் உடைத்து பழம் நிவேதனம் செய்து தீப தூப ஆராதனை காண்பித்து புஷ்பமும் துளசி தீர்த்தமும், பிரசாதமும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். 


இங்கே பள்ளி கொண்ட பெருமாளை இவர்கள் பிரதிஷ்டை செய்திருந்தார்கள் .வாசுகி குடைபிடிக்க பெருமாளின் காலடியில் ஸ்ரீதேவி வாசம் செய்ய, லெக்ஷ்மணன், ஆஞ்சநேயர் சூழ நாபிக்கமலத்தில் ப்ரம்மா எழுந்தருள மிக அருமையாக வெள்ளியால் செய்யப்பட்டு மரத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்தச் சிலை கேரளாவில் சென்ற நூற்றாண்டில் வாங்கி வரப்பட்டதாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலப் பரவசம்.


பட்டாபிஷேகக் கதையைப் படிக்கும்போது நாமே அந்தக் காலத்துக்குள் நுழைகிறோம். சீதை சிறையிருந்த காதையைப் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் தன்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்து விடுவதாக உறவினர் கூறினார்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை தினம் ராமஜெயம் எழுதும் பழக்கம் இருந்தது. தீமைகளை எதிர்த்துப் போரிடும் ராமர் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதெல்லாம் மனதில் ஓடும். வலைத்தளம் எழுத வந்து விட்டுப் போன பழக்கங்களில் அதுவும் ஒன்றாகி விட்டது. 

அவர்கள் அன்று வாசித்தது கம்பர் எழுதிய ”இராமாயண சங்கிரகம்” ( மதுரை ஜில்லா, செம்பூர் வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் இயற்றப்பட்டு சென்னை ”ஆனந்த போதினி” பத்ராதிபர் நா. முனிசாமி முதலியார் அவர்களால் வெளியிடப்பட்டது.

முதலில் சில பாடல்கள் ( துதிச் செய்யுட்கள் -- பரம்பொருள், சரஸ்வதி, அநுமான், நம்மாழ்வார் ) படிக்கப்பட்டு பின்  பட்டாபிஷேகம் படிக்கப்பட்டு பின்நிறைவாக சில ( ராம என்னும் பெயரின் சிறப்பு,  கிடைக்கும் நன்மைகள், திருமுடி சூட்டுதல் ) பாடல்கள் படிக்கப்படுகின்றன.

தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இது போல நிகழ்வுகள் உறவினர்கள் கூடி மகிழவும் பயன்படுகின்றது. ஆன்மீகத்தோடு கொஞ்சம் குடும்ப ஒற்றுமையும் பலப்படுகிறது. எனவேதான் இதுபோல அடிக்கடி அனைவரும் கூடி மகிழும் நிகழ்வுகள் அன்றைய காலக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

இன்று அவசர உலகில், அவரவர் உலகில் எதற்குமே நேரமில்லாதவர்களாகி விட்டோம். யாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் நம்மையே கூட உணர முடியாமல் எங்கோ அவசரமாக எல்லாரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் ஆன்மீகத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் தன்மேல் அக்கறை கொண்டவர்களுக்காகவும், தனக்காகவும் நேரம் ஒதுக்க முடிந்தால் உடல் நலம் , மன நலம், குடும்ப இறையாண்மை எல்லாமே ஜெயிக்கும்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
இன்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையில் ராம என்றிரண்டெழுத்தினால்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடிவில் சொன்னது அவரவர் உணர வேண்டும் சகோதரி...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள்.

//நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
இன்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையில் ராம என்றிரண்டெழுத்தினால். //

உண்மை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

சே. குமார் சொன்னது…

அழகான படங்களுடன் நல்லதொரு பகிர்வு அக்கா...
வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி வைகோ சார்

நன்றி குமார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Lakshmi Kumar சொன்னது…

தயவு செய்து இங்கே இப்படத்தில் உள்ள ராமாயணத்தைப்பாராயணம் செய்ய (6 காண்டங்களையும்) பதிவுசெய்தால் பாராயணம் செய்யவசதியாக இருக்கும்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...