எனது நூல்கள்.

வியாழன், 10 அக்டோபர், 2013

இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )துபாய் நகரத்தார் சங்கத்தின் ஆண்டு விழாவில் “ இனியெல்லாம் சுகமே ”என்ற நாடகம் யூ ட்யூபில் பார்த்தேன்.

ஒரு சர்ப்ரைசிங் விஷயம்   என் தம்பி மனைவி சீதாலெக்ஷ்மி மெய்யப்பன் இந்த நாடகத்துக்கு வசனம் எழுதி இருக்காங்க. இதை இயக்கியவர் சோம சேகர்.


சும்மா பேசும்போதே நறுவிசா பேசத் தெரிஞ்சவங்க என் தம்பி மனைவி. அவங்களோட டயலாக் ஒண்ணொண்ணும் சும்மா நச். மேலும்  நகரத்தார் குடும்பங்களில்  நிகழும் சம்பாஷணைகள் அதே பாணியில் அருமையாக இருக்கு.

இந்த நாடகத்துக்கான உங்க இன்ஸ்பிரேஷன் என்னன்னு அவங்க கிட்டே கேட்டேன். ”ஸ்கூல் டேஸ்லேயே  எனக்கு நாடகம் எல்லாம் பிடிக்கும். போட்டுருக்கோம். பொதுவா இக்கரைக்கு அக்கரைப் பச்சைன்னு சொல்வோம்.  அதுபோல சௌதில இருக்கும்போது எல்லாரும் இந்தியாவைப் பத்திப் பேசுவாங்க. அத பேஸ் பண்ணி இந்த ட்ராமாவை அமைச்சேன்னாங்க.”

ஆச்சர்யமா இருந்துச்சு. அடேங்கப்பா . நம்ம கூடவே இருக்காங்க. ஆனா சிலரின் திறமைகள் நமக்குத் தெரியிறதுல்ல. எப்பவாவது அபூர்வமா இப்பிடித் தெரிஞ்சுக்கிறோம்.

இந்த நாடகத்துல என் தம்பி மெய்யப்பன், அவனோட பையன் தண்ணீர்மலை, என் தம்பி மனைவி சீதாலெக்ஷ்மி, மேலும் ஒரு சின்னப் பெண்ணும் நடிச்சிருக்காங்க. கண்ணன் , பார்வதி கண்ணனின் நடிப்பு அசத்தல். வள்ளியாச்சியும் சூப்பரா செய்திருக்காங்க. நாத்தனார், சித்தி , அத்தை ஆகியோரும் அசத்தி இருக்காங்க.

நாத்தனார், சித்தி, அத்தை ஆகிய உறவுகளுடன் விட்டுக் கொடுத்துப் போவதான வசனங்களும் அருமை. எந்த வசனத்திலும் யாரையும் குறை சொல்லாமல் சின்ன சட்டையரோடு ( satire)  இருக்கும் இந்த நாடகம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

இதை சோமசேகர் மிக அருமையா டைரக்ட் செய்திருக்காரு. மேலும் காமெடி கிங் வடிவேலுவின் பஞ்ச் டயலாக்ஸை அங்கங்கே பயன்படுத்தி இருக்காங்க. நாம் நம் எல்லா உறவினருடனும் விட்டுக் கொடுத்து இணைந்து வாழ்ந்தால் வாழ்வில் இனியெல்லாம் சுகமேன்னு சொன்ன இதைப் பார்த்து நான் ரசித்தேன். சிரித்தேன். நீங்களும் அதையேதான் செய்யப்போறீங்க. :)

 டிஸ்கி:- துபாய் நகரத்தார் சங்கம் இன்னும் ”ஏரில்  ஏரோட்டி( Air'il Aerotti)” என்ற நாடகமும் போட்டிருக்காங்க. அதைப் பார்த்தால் முதன்முதலா ஃப்ளைட் ஏறினவங்க விழுந்து புரண்டு சிரிப்பாங்க. அவ்வளவு யதார்த்தக் காமெடி.

இன்னும் கனடா நகரத்தார் சங்கம் “எங்க அப்பச்சி சாந்திக்கு வாங்க” என்ற நாடகம் போட்டிருக்காங்க. இதை எழுதியவர் என் கணவரோடு பணிபுரிந்த வி பால் என்ற பழனியப்பன் அவர்கள்.  ரொம்ப ஆச்சர்யமா இருந்தது வங்கிப்பணியில் இருந்தபோது இவரிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதே தெரியாது.

 நம் ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவோ திறமைகள் ஒளிந்திருக்கின்றன.  கணத்துக்காய்க் காத்திருக்கும்போது நம்மைப் புடமிட்டுக் கொண்டால் தருணம் வாய்க்கும்போது நம் திறமை ஜொலிக்கும்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


 

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சீதாலெக்ஷ்மி மெய்யப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...