எனது நூல்கள்.

செவ்வாய், 25 ஜூன், 2013

திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். சில கருத்துக்களும் ஆலோசனைகளும்.

காரைக்குடியைச் சேர்ந்த திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்கள் தனது சிறுவயதிலிருந்தே மலேஷியாவில் வசித்து வந்தவர்கள். கல்லூரிப் பருவத்தில் மட்டும் இந்தியாவுக்கு வந்து சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் வேதியியல்  படித்தார். பின் 70 களில் திருமணம் .  நான்கு குழந்தைகள்.


95 வரை மலேஷியாவில் வேதியல் ஆசிரியராகப்பணி, ஆங்கிலத்திலும் மலேஷிய மொழியிலும் விஞ்ஞான பாடப் புத்தகங்கள் எழுதியுள்ளார். பின் இந்தியா வந்து பங்குச்சந்தையில் ஈடுபட்டார்.

பங்குச்சந்தையில் வேலை செய்வதற்கு வேண்டிய NCFM தகுதித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடத்துகிறார். சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்,பள்ளிக் குழந்தைகளுக்கான பயிற்சிப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

தற்போது சென்னையில் வசித்து வரும் அவர் சமீபத்தில் ஐரோப்பிய டூர் சென்று வந்துள்ளார். இதற்கு முன்பே இலங்கை மலேஷியா சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் அமர்நாத்,  ஆகிய இடங்களுக்குச் சென்று  வந்தவர். அவரது ஐரோப்பா டூர் பற்றி நமது வலைத்தளத்திற்காக சில கேள்விகள்.


1.நீங்கள் சமீபத்தில் ஐரோப்பா டூர் சென்று வந்திருப்பதாக அறிந்தேன். பெரும்பாலும் மலேஷியாவிலேயே வசித்த தாங்கள் மற்ற நாடுகளில் என்ன வித்யாசத்தை உணர்ந்தீர்கள்.

மலேஷியாவில் நீங்கள் ஆசிரியர் என்று சொன்னாலே போதும். முதலில் மதிக்கப்படுபவர்கள் அவர்கள்தான்.

சிங்கப்பூரில் - எந்த இனத்தவராய் இருந்தாலும் மூத்த குடிமக்களுக்கு உண்மையாகவே மதிப்பளிப்பதுதான். பேருந்தில் இளைஞர்கள் உடனே எழுந்து நம்மை அமரச் செய்வது போற்றத்தக்கது.

இந்தியாவில் -  அரசியல்வாதிகளுக்குப் பயப்படுவதும், டாக்டர் என்றால் மரியாதை செய்வதும் வித்தியாசமானது.

அமெரிக்காவில் -  எல்லாரிடமும் புன்னகை. ‘Hai, How are you” என்று எதிரில் வருபவர் யாராக இருந்தாலும் சொல்வது. உதவும் மனப்பான்மை அதிகம்.

ஐரோப்பாவில்
இங்கிலாந்தில் - நம்மைக் கண்டு கொள்வதே இல்லை.

ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதெர்லாந்து,ஜெர்மெனி,சுவிட்சர்லாந்து, லீகென்ஸ்டெய்ன், ஆஸ்த்ரியா – நம்மை விட மேம்பட்டவர்கள் போல் தோற்றத்திலும் பேச்சிலும் நடந்து கொள்வது

இத்தாலி, வாடிகன் – நம்ம ஊரு போல வருமா? வரும்! இங்கே வரும்‼

மற்ற நாடுகளில் ட்ராஃபிக் ஸிக்னலில் மஞ்சள் விளக்கு வரும்போதே வாகனத்தை நிறுத்தி விடுவார்கள். அமெரிக்காவில் நாம் ரோடைக் கிராஸ் செய்வதற்காகக் காத்திருப்பது தெரிந்தாலே வாகனத்தை நிறுத்தி விடுவார்கள். நாம் போகச் சொன்னாலும் ( நம்மைக் கெஞ்சி! ) நாம் கிராஸ் செய்த பிறகே வாகனத்தை எடுப்பார்கள்.

எங்கே கியூ இருந்தாலும் கவுண்டர் அருகே ஒருவர் மட்டுமே நிற்பார்கள். மற்றவர்கள் 5 அடி தள்ளி இருப்பார்கள். ஒருவருக்கொருவர் ஓரடி தள்ளியே நிற்பார்கள்.

2. ஐரோப்பிய டூர் செல்ல தாங்கள் இந்தியாவில் என்னென்ன முன் முயற்சிகள் மேற்கொண்டீர்கள்.
( பாஸ்போர்ட் விசா, பணப் பரிவர்த்தனை, உடல் நலம், இன்சூரன்ஸ் )

டிரவெல் ஏஜெண்ட் UK Visa and Schengen visa.(ஸ்கென்ஜென், ஷென்ஜென்?) வாங்க இரண்டு பேருக்கு 42000 ரூபாய்க்கான செக்கையும் வாங்கிக்கொண்டு, ஒரு அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்.  நாம் ஒரு வேளை போக வேண்டாமென்று நினைத்தால் பணம் திரும்பக் கிடைக்காது. எதற்கும் அக்ரீமெண்டை படித்து வைத்துக் கொள்வது நல்லது. ஃபாண்ட் சைஸ்தான் 7க்கும் கீழே!

பாஸ்போர்ட் காப்பி ஒன்று கேட்பார்கள். பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்க வேண்டும்.

 6 மாத S.B. கணக்கு அறிக்கை வேண்டும். அதில் ஒரு ஆளுக்கு குறைந்தது 1.5 லட்சம் பாலன்ஸ் இருக்க வேண்டும். ரொக்கப் பரிமாற்றங்கள் கூடாது என்று சொன்னார்கள். செக்தான், ஆனால் பினாமியாக இருக்கக் கூடாது. விளக்கங்கள் தேவை.

அடுத்து சொத்து பத்திரங்கள் வேண்டும். ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். தமிழில் இருந்தால் High Court ல் கொடுத்து மொழிபெயர்த்து நோட்டரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

பாங்க் டெப்பாஸிட்டுகள், எல்.ஐ.சி சர்ட்டிபிகேட், மூன்று வருட இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன் ஆகியவையும் வேண்டும்.

பிஸினஸ் செய்பவர்களுக்கும், பென்ஷனர்களுக்கும் மேற்கண்ட பூரா விபரங்களும் தேவைப்படாது. சும்மாவின் மாமா இந்தியாவில் சும்மா இருந்ததால் இவ்வளவு விபரங்கள் கேட்டார்கள்

எதையும் கொடுப்பதற்கு முன்னால் அவசியம் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளவும்.

பாஸ்போர்ட், விஸா, ட்ராவெல் இன்ஸூரென்ஸ், பெட்டிகள் ஆகியவற்றை உங்கள் மோபைலில் ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சுமார் 15 நாட்களில் UK விஸாவிற்கு பாரங்களை டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து நம் கையெழுத்தை வாங்கி அனுப்பி வைப்பார்கள். பெரும்பாலும் விஸா நிச்சயமாகக் கிடைப்பதற்குத் தோதாக இவர்களே எல்லாவற்றையும் நம்மிடம் கேட்டு வாங்கி அனுப்புவதால் விஸா கிடைத்துவிடும். நாம் கையெழுத்திட்டு கொடுத்த 15 நாட்களுக்குள் VFSல் இன்டெர்வியூவிற்கான தேதி ஆன்லைனில் கிடைத்து விடும். எல்லாம் சரியாகச் செய்து தந்துவிடுவதால் இன்டெர்வியூவில் கேள்விகளுக்கு இடமில்லை. பிறகு 10 நாட்களில் விசா கிடைத்து விடும்.

UK visa கிடைத்த பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே ’ஷென்ஜென்’ விசாவிற்கு டிராவெல் ஏஜெண்ட்ஸ் தயார் செய்து மும்பைக்கு அனுப்ப வேண்டும் அது இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகலாம். ஆக பயணம் செய்யும் தேதிக்கு 80 நாட்கள் முன்னதாக நீங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் passport with schegen visa ஏர்போர்ட்டில் இருக்கும்பொது கூட கிடைக்கலாம் ‼! (Foreign exchange வாங்குவதற்கு பாஸ்போர்ட் ஜெராக்ஸ் கையில் வைத்துக் கொள்ளவும். விசா விபரத்தை டிராவெல் ஏஜெண்ட்ஸ் கூட கொடுத்துக் கொள்ளலாம்.)

Basic Travel Quota BTQ, cash US $ 3000, Travellers cheque and travellers card US$ 7000. Buy mostly Euro (700) and some Pound (100) , Franc(150) and some US$ (100). Tipping: Euro 2 per person per day.

3. இந்தப் பயணத்திற்காக கைவசம் எடுத்துச் சென்றவை என்னென்ன.. அங்கு வாங்கியவை என்னென்ன?

Buy the following in India before your trip. கீழ்க்கண்டவற்றை இந்தியாவிலேயே வாங்கிச் செல்லவும். விலை மலிவு. அங்கே தேடி அலைந்து வாங்குவதற்குள் விரைத்து விடுவோம்! அதற்கான நேரமும் உங்கள் சுற்றுலா நடத்துனர் தரப் போவதில்லை

1.   சூட்கேஸ்களுக்குத் தேவையான சிறிய பூட்டுகள்
2.   ஸ்பிரிங் பாலன்ஸ்
3.   பழம் நறுக்கும் கத்தி
4.   கழுத்துக்கு உல்லன் துப்பட்டா
5.   உல்லன் குரங்குக் குல்லாய்
6.   Thermal wear உடம்புச்சூட்டை உள்ளேயே வைத்திருக்கும்
7.   ஜீன்ஸ், சலவைக் கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஒரு செட் ஆடையையே வாங்கி விடலாம்.
8.   Shawl பெண்களுக்கு
9.   Scarf பெண்களுக்கு
10.   Sweater லேசான ஸ்வெட்டெர்
11.   Gloves சாதாரண கையுறையே போதும்
12.   Cd containing movies, songs, titbits, jokes, puzzles சொகுசுப் பஸ்ஸில் செல்லும்போது பொழுது போக்க உங்கள் பங்களிப்பிற்கு.
13.   Spects ஸ்பேர் மூக்குக் கண்ணாடி
14.   Chargers ஃபோன், காமெரா, எம் பி 3, லாப்டாப் பாட்டெரிகளுக்கு சார்ஜர்
15.   Adaptors (see the pictures of electrical sockets in UK and in Europe) பிளக் பாயிண்டுகள் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் வெவ்வேறானவை. இந்திய 2 பின், 3 பின் ப்ளக்குகளை அங்கு மாட்ட முடியாது. ஹோட்டலில் 10 யூரோ டெப்பாஸிட் கட்டி அடாப்டர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டால் அதன் விலை உங்களுக்கு 720 ரூபாய் ஆகிவிடும். அதற்கு, இந்தியாவிலேயே international travel adapter என்று கேட்டு வாங்கிச் செல்லலாம். அல்லது ஃபோட்டோவில் இருப்பது போன்ற பிளக்குகள் இருந்தால் அவற்றை உபயோகப்படுத்தலாம்.
16.   எப்போதும் உபயோகப்படுத்தும் மருந்துகளுடன் தலைவலி மாத்திரைகள் போன்றவையும்
17.   Sunglasses அவசியம் தேவை. பனிமலைச் சிகரங்களில் பயங்கரமாகக் கண் கூசும்.
18.   குடை - திடீரென்று மழை வரும், குறிப்பாக இத்தாலியில்.
19.   Walking shoes, for ladies also. நைக்கி ரீபோக் வாக்கிங் ஷூஸ் வாங்கவும். நிறைய நடக்க வேண்டியதிருக்கும். ஆனால் குளிர் பிரதேசங்கள் ஆனதால் நடப்பதில் சிரமம் தெரியாது, நல்ல ஷூஸ் போட்டிருந்தால். பெண்களுக்கும் வாங்க வேண்டியதுதான்
20.   Lip balm சுவிட்சர்லாந்தில் உதடு வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. 0 டிக்ரீ ஸெல்ஸியஸ்
21.   Buy 2 Suitcases with wheels and strong handles!  கைப்பிடி வலுவானதாக இருக்கட்டும். Checking in, 30 kg, and a hand luggage, 7 kg.

Do not be lazy to carry any of them. You may encounter severe health problems. Temperaure 8-18*C‼
இந்தியாவிலேயே uniconnec ஃபோன் கார்டு ஒன்று 1000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளவும். யூரோப் பூராவும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு நிமிடத்திற்கு 17 ரூபாய் ஆகும். மிஸ்டு கால் கொடுத்து உங்கள் உறவினர்கள் இந்தியாவிலிருந்து கூப்பிட்டால் 6.50 ரூபாய் ஆகும்!

உறவினர்களுக்குக் கொடுக்க லண்டனில் 1 பவுண்ட் ஷாப் என்றும் வெனீஸில் 1 யூரோ ஷாப் என்றும் தேடிப் பார்த்து வாங்க வேண்டும். சாக்லேட்டுகளை லீக்கென்ஸ்டெய்னில் கோ ஓப்பெரடிவ்வில் வாங்கலாம். வரியில்லாத நாடு.

4. பயணங்கள் மனிதர்களைப் புதுப்பிக்கின்றன. இந்தப் பயணம் உங்களை எந்த விதத்தில் புதுப்பித்தது?

எதிர் மறையான எண்ணங்களை ஒழித்தது. ”இது நம்மால முடியாது. உலகமே நமக்கு எதிராகச் செயல் படுகிறதோ? இந்தியா ரெம்ப மோசம்” என்ற எண்ணங்கள் மாறியது.

என் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய என் பயத்தையே மாற்றி அமைத்தது. நான் பஸ்ஸிலேயே பத்து நாடுகளையும் நிறய்ய நடையுடன் 14 நாட்கள் சுற்றி வந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. “Nothing ventured, nothing gained”

‘Discipline” விட்டுக் கொடுத்தல் காலம் தவறாமை (டூர் மானேஜர் விட்டுட்டுப் போயிட்டார்னா?!) ஆகியவை தன்னால் வந்து விடும்

5. என்னென்ன நாடுகளைக் கண்டு களித்தீர்கள். அங்கு கிடைத்த வித்யாசமான அனுபவங்கள் பற்றி?

இங்கிலாந்து – சிம்னி வைத்த வீடுகள், குறுகலான தெருக்கள்,மேடம் டூஸாட்ஸ் வாக்ஸ் (மெழுகுச் சிலைகள்) மியூசியம், லண்டன் ஐ வீல் (பறவையின் பார்வை)

ஃப்ரான்ஸ் - ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் யூரோடனல் (கடலுக்கடியில் ரயில் பாதை), பராதே லாதீன் ஷோ (மிக டீஸண்டான காபரே), ஐஃபில் டவர், நோட்ர் டாம் கதீட்ரல், மோனா லிசா உள்ள மியூஸியம்

பெல்ஜியம் – புருஸெல்ஸில் மான்னெக்கென் பீஸா (சிறுநீர் கழிக்கும் சிறுவன்) சிலை, ஆட்டோமியம் (இரும்பு அனுவின் உள்ளமைப்பு) ஆண்ட்வெர்ப் டைமண்ட்லாண்ட்

நெதெர்லாந்து - கூக்கென்ஹோஃப் டுலீப் தோட்டம், சீஸ் ஃபாக்டரி, விண்ட் மில், ,

ஜெர்மெனி – ஓ டி கோலோன் ஒரிஜினல் ஷாப், கோலோன் கதீட்ரல், ரைன் நதியின்மீது படகு சவாரி, ப்ளாக் ஃபோரெஸ்ட், குக்கூ க்ளாக்

சுவிட்சர்லாந்து – (மல மல  ஆறு எங்கெங்கும்) ரைன் ஃபால்ஸ், ஜூரிச், மவுண்ட் டிட்லிஸ்(10 000 அடி), யூங்ஃப்ராவோ யூரோப்பின் சிகரத்தில் 11333 அடி) வித விதமான 200 கேபிள் கார்கள்

லீகென்ஸ்டெய்ன் – வாடூஸ் – வரி இல்லா நாடு, எல்ல நாட்டு அரசியல் வாதிகளுக்கும் தாதாக்களுக்கும் அக்கவுண்ட் உண்டு என்கிறார்கள்

ஆஸ்த்ரியா – ஸ்வராவ்ஸ்கி (கிறிஸ்டல் கல் நகைகள்), வைன் யார்ட்ஸ் (திராட்ச்சைத் தோட்டங்கள்) வைனும் ஷாம்பேனும்தான்

இத்தாலி - வெனீஸில் கீடெக்கா கானல் போட் ரைட், ஸெயிண்ட் மார்க் பாஸிலிகா, க்ளாக் டவர்

பீஸா - சாய்ந்த கோபுரம், ஃப்ளாரென்ஸ்

ரோம் – பழைய ரோமானிய கோட்டைகள், த்ரெவி ஃபவுண்டன், 3D யில் ரோமானிய சரித்திரம், கொலோஸியம்

வாடிகன் – உலகத்தின் மிகச் சிறிய நகரம், மிகப் பெரிய கதீட்ரல் ஸெய்ண்ட் பீட்டர்ஸ் பாஸிலிகா

எல்லா நாடுகளிலும் உடையும் கட்டிடங்களும் ரசிக்கத் தக்கவை. நாம் பார்திராத வித்தியாசமானவை.

லண்டனிலிருந்து ஃபோக்ஸ்டோனுக்கு பஸ்ஸில் வந்தோம். ஃபோக்ஸ்டோனிலிருந்து யூரோ டன்னல் வழியாக காலேய்லுக்கு வந்து பின் பாரீஸிற்கு வந்தோம். யூரோ டன்னல் என்பது ஃபோக்ஸ்டோனை காலேய்லுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் போடப்பட்ட ரயில் பாதை ஆகும். பஸ்ஸை அப்படியே ரயிலில் ஏற்றி விடுகிறார்கள். நாம் இறங்கி நிற்க சிறிது இடம் இருக்கிறது. ஒவ்வொரு பஸ்ஸுக்கும் இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது. சுமார் 30 நிமிடத்தில் பயணம் முடிந்து விடுகிறது.

அலுப்புத் தெரியாமல் எல்லா நாடுகளுக்கும் பஸ்ஸிலேயே போக முடியுமா? முடியும். சாலைகள் அவ்விதம். ஒரு நாளைக்கு ஒரே தடவையில் 500 கிலோ மீட்டர்  மூன்று மணி நேரத்தில் போகிறார்கள். ஆனால் இத்தாலிக்குள் நுழைந்தோமா, டிரைவர் பாடு குஷிதான். இந்தியாவில் இருப்பது போன்று பெருமிதமாக இருந்தது! எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்தார்கள். அதற்கு முந்திய நாடுகளில் பஸ்ஸில் சாப்பிட்டாலே போலிஸில் ஃபைன் கட்ட வேண்டும் என்றார்கள்!

சாலைகளில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் உலோகப் பொருட்கள் அழகானவை. இன்னும் 100 வருடத்திற்கு அழியாதவை. “no cement pillars, which break easily!”

ஜலதோஷம் யாருக்குமே இல்லை
எல்லா நாடுகளிலுமே இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது

6. கலாச்சார ஒப்பீட்டீல் நம் நாடு அந்த நாடுகளுடன்  எந்த அளவில் உள்ளது.

அமெரிக்காவில் பெர்ஸனல் கேள்விகள் யாரும் கேட்பதில்லை. உ-ம் கல்யாணம் ஆச்சா? எத்தனை குழந்தைகள்? என்ன வேலை?
ஐரோப்பாவில் நிறம் மதம் வேறானாலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில நல்ல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக நம்முடைய குடும்ப வாழ்க்கை முறை அவர்களை விட மேம்பட்டதாகத்தான் கருதுகிறேன்.

7. வாழ்வியல், ஆண் பெண் நட்பு, இணைய உலகம் இவை பற்றி உங்களது கருத்துக்கள்.

வாழ்வியல்:
குழந்தைகள் நம்மைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நாம் அவர்களுக்கு நல்லதுதான் செய்வோம் என்ற நம்பிக்கை உண்டாகும்படி நடந்து கொள்ள வேண்டும். ”To get and forget is evil, to give and forgive is noble” என்பது அவர்களுக்குப் புரியும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். தன்னால் அவர்கள் நம் பின்னே வந்து விடுவார்கள்.

ஆண் பெண் நட்பு:
சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுடன் கலந்து வளர்ந்த பெண்ணும், பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வளர்ந்த ஆணும் சுலபமாக இனக் கவர்ச்சிக்கு ஆளாவதில்லை. அதுதான் கூட்டுக் குடும்பத்தின் மேன்மை. இன்றைய உலகில் நட்பு தேவைதான். அது வெறும் நட்புதான் என்றிருக்கும் வரை. சிவக்குமாரை சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு எப்படிச் சம்மதிதீர்கள் என்று கேட்டார்கள். சூர்யா 20 வயதுப் பையனல்ல, infatuation என்று நினைப்பதற்கு. அவன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து, பிறகு சினிமா இண்டஸ்ட்ரியிலும் பல வருடங்கள் வேலைபார்த்து அனுபவபட்டு maturity அடைந்த பிறகுதான் அந்த்த் திருமணத்தை முடிவு செய்தான். அது சரியாகத்தான் இருக்கும் என்றார். நட்பின் எல்லை தெரிந்திருக்கவேண்டும்.

இணைய உலகம்:
காட்டராக்டுக்கு கண் ஆபரேஷன் தேவையா இல்லையா, எந்த செல்ஃபோன் வாங்கலாம், +2 வேதியியல் பரீட்சைக்கு எப்படிப் படிக்கலாம், செலவில்லாமல் உங்கள் டாக்குமெண்டுகளை இ மெய்லில் பத்திரப் படுத்தலாம். உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக் கொள்ளலாம். என்ன இல்லை இணையத்தில்! Facebook, twitter ஆகியவற்றில் அதிகம் ஈடுபாடு இல்லை. என்னுடைய அனுபவம் பலருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பணம் சேமிப்பது, மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது, சுற்றுப்பயணம் செல்பவர்கள் முன்னெச்செரிக்கையாகச் செய்ய வேண்டியவைகள் ஆகியவற்றை www.summavinmama-rama.blogspot.com என்ற முகவரியில் தந்துள்ளேன்

8. க்ளைமேட் மற்றும் வயது காரணமாக எந்தெந்த வயதினர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம். தகுந்த நேரம் எது. எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவைக்கை என்னென்ன.?

ஆரோக்கியமாக உடம்பை வைத்துக்கொள்ளக் கூடியவர்கள் நடக்கக் கூடியவர்கள் (அப்படி இல்லாவிடாலும் மருந்துகளை முறையாக உட்கொள்ளுபவர்கள்) 70 வயது வரை போகலாம். பெரும்பாலும் மே ஜூன்தான் உசிதமானது. முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் வாங்கிச் செல்ல வேண்டியவைகளை கொண்டு சென்றால் பிரச்சினைகள் ஏதும் இராது


9.  இருவர் சென்று வர என்ன செலவு ஆகும். 

இரண்டு விஸாக்களுக்கும், இன்ஸூரன்ஸுக்கும், டூர் ஆப்பரேட்டருக்கும் 3,30,000 Foreigh exchange US $50 UK Pound 50 Swiss Franc 50 Euro 700 க்கு ரூ 65,000. குளிர் தாங்கும் டிரஸ் வகையறாவுக்கு ரூ 5000 ஆக மொத்தம் ரூ 4,00,000
9 கருத்துகள் :

middleclassmadhavi சொன்னது…

Useful information

கலாகுமரன் சொன்னது…

//அமெரிக்காவில் நாம் ரோடைக் கிராஸ் செய்வதற்காகக் காத்திருப்பது தெரிந்தாலே வாகனத்தை நிறுத்தி விடுவார்கள். நாம் போகச் சொன்னாலும் ( நம்மைக் கெஞ்சி! ) நாம் கிராஸ் செய்த பிறகே வாகனத்தை எடுப்பார்கள்.// இந்தியர்கள் எந்த காலத்தில் இதை கற்றுக்க போறாங்களோ ! வெளிநாட்டைப் பற்றி பல சுவையான நல்ல பல தகவல்கள் ! நன்றி

A. Manavalan சொன்னது…

Good info for those who intend to go foreign tours. A very good interview by Summa editor.

கீதமஞ்சரி சொன்னது…

ஐரோப்பிய சுற்றுப்பயணம் செல்ல விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள பதிவு. ஷெங்கன் விசா பற்றி விரிவாக விளக்கியுள்ளமை பலருக்கும் பயன்படும். உறவினர் ஒருவர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின்போது குளிருக்குத் தேவையான உடைகள் இல்லாமல் போய் பட்டபாட்டை அறிவேன். இந்தப் பதிவில் தெளிவாக அவற்றைக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. பகிர்வுக்கு நன்றி தோழி.

Unknown சொன்னது…

ஐரோப்பாவில்
இங்கிலாந்தில் - நம்மைக் கண்டு கொள்வதே இல்லை.

ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதெர்லாந்து,ஜெர்மெனி,சுவிட்சர்லாந்து, லீகென்ஸ்டெய்ன், ஆஸ்த்ரியா – நம்மை விட மேம்பட்டவர்கள் போல் தோற்றத்திலும் பேச்சிலும் நடந்து கொள்வது
.............நிஜத்தின் பிரதிபலிப்பு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மாதவி

நன்றி கலாகுமரன்

நன்றி கீதமஞ்சரி

நன்றி பரிதி முத்தரசன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ADMIN சொன்னது…

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வர நினைப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் இவை.

ஒவ்வொரு வரியையும் ஊன்றி படித்தேன்.. பதிவில் இடம்பெற்ற படங்களும் அருமை.

திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் அனுபவங்களையும், பயனுள்ள தகவல்களை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி தங்கம் பழனி சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...