எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 ஜூலை, 2011

கிரஹலெக்ஷ்மி பெண்கள் சுய உதவிக் குழு.





சென்னையில் இருக்கும் ஒரு சுய உதவிக் குழுவை ஷேர் ஆட்டோவில் செல்லும் போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 11 பேர் இருந்தார்கள்..ஒரே மாதிரி டிசைன்., கலர் உள்ள புடவை உடுத்தி இருந்தார்கள் அவர்களின் முக மலர்ச்சியும் பேச்சும் மிக அழகாக இருந்தது. அவர்களிடம் பேச்சு கொடுத்த போது தங்கள் மாதாந்திரக் கூட்டத்துக்காக செல்வதாக சொன்னார்கள்..



மாம்பலத்தில் இருக்கும் அவர்கள் மாதம் ஒரு முறை தி. நகரில் சந்திக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர் கிரஹலெட்சுமி., இதன் தலைவி பெயர் ப்ரியா. கிட்டத்தட்ட 20 பேர் சேர்ந்து ஆரம்பித்த குழு இது. தற்போது 14 பேர் இருக்கிறார்கள். மார்ச் 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட குழு இது

இவர்களின் NGO வின் பெயர் சரஸ்வதி . இவர்தான் இவர்கள் தொழில் செய்ய உதவியவர். வெஸ்ட்னோரா என்ற அமைப்பு மூலம் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்து 4 மாதத்தில் லோன் கிடைக்கப் பெற்றது.

கவர்ன்மெண்ட் மூலம் இல்லை. இது தனிப்பட்ட முறையில் உருவான குழு. இப்போது கவர்ன்மெண்ட் அப்ரூவலுக்காக காத்து இருக்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் லோன் வாங்கி கட்டி முடித்து தற்போது இரண்டாவது முறையாக லோன் வாங்கப் போகிறார்கள்.

மாதம் 100 ரூபாய் வீதம் எல்லா மெம்பரும் பாங்கில் சேவிங்க்ஸ் அக்கவுண்டில் கட்டி வருகிறார்கள். 4 மாதம் 5 மாதம் ஆனவுடன் ஒரு லட்சம் லோன் சாங்ஷன் ஆனது. 20 பேரும் ஆளுக்கு 5000 வீதம் பிரித்து எடுத்து அவரவரும் ஒர் தொழிலில் முதலீடு செய்து தற்போது லோனை கட்டி முடிக்கப் போகிறார்கள்..

பொதுவாக பூவியாபாரம்., பழம்., ஊதுபத்தி., வடகம்., வத்தல் போட்டு விற்றல்., மளிகைக் கடை., புடவை வியாபாரம் கேட்டரிங்., தையலை தைத்து விற்றல்., ஆகிய தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 5000 ரூபாய்க்குள் என்ன வியாபாரம் செய்ய முடியுமோ அதில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தில் வீட்டு செலவுக்கும் ஈடு கொடுத்து வட்டி அசலும் கட்டி வருகிறார்கள்.


ஐஓபி யில் இரண்டு பேர் பேரில் அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் பிரதி மாதம் 10 ஆம் தேதி வட்டியும் அசலும் சேர்த்து கட்டி வருகிறார்கள்.

மாதம் 8,827 ரூபாய் கட்ட வேண்டும் . தற்போது 14 மெம்பர்கள் இருப்பதால் ( மற்றவர்கள் தொடர முடியாமல் விலகி சென்று விட்டார்கள் ). ரூபாய் 445 வீதம் 12 மாதம் 2 % வட்டியில் திரும்பிக் கட்டி வருகிறார்கள்.


குழுவாய் இருப்பதால் வங்கியில் லோன் கிடைக்கிறது. தமது பணத்தையும் கொஞ்சம் மாதம் சேர்த்தபின்னேதான் பணம் கிடைக்கிறது, குழுவாய் இருப்பதால் திரும்பக் கட்டுவதும் ஈஸியாய் இருக்கிறது. வெளியே வாங்கினால் 10 பைசா வட்டி. அதனால் பெண்கள் சுய உதவிக் குழுவில் பணம் வங்கியில் கடன் வாங்கி் தொழில் செய்தால்., குடும்பத்துக்கு., அவசரதேவைகளுக்கும்., வியாபாரத்துக்கும்., சில சமயம் குழந்தைகள் படிப்பு செலவுக்கும் உதவியாக இருப்பதால் வங்கியில் வாங்கும் பணத்தை பெண்கள் பொறுப்பெடுத்து திரும்பக் கட்டி விடுகிறார்கள். சுய உதவிக் குழுக்கள் இவ்வாறு சரியாக செயல்படுவதால் வங்கிகளும் அவர்களுக்கு லோனாக பணத்தை வழங்குகின்றன.

கவர்மெண்டில் கிடைக்கும் மானிய சலுகைக்காக கவர்ன்மெண்டுக்கு அப்ளை செய்து உள்ளார்கள்.

இவர்களே மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பதால் (சுமார் 100 ரூபாய் ஒரு மெம்பர் ) அதுவே இப்போது 29,000 ரூபாயாக உள்ளது. அதையே மெம்பர்களுக்கும் உள் கடனாக வழங்குகிறார்கள். அதில் 2, 000., 3, 000 கடன் வாங்கி மாதம் 400 அல்லது 500 ரூபாய் வீதம் 5., 6 மாதங்களில் திரும்பச் செலுத்தி விடுகிறார்கள்.. இது அவசரத்தேவைகளுக்கு உதவுகிறது.

தொழிலில் இன்னும் அதிகம் இன்வெஸ்ட் செய்ய., உடல் நலமில்லாவிட்டால்., குழந்தைகள் படிப்பு செலவு., அல்லது வீட்டில் ஒரு நல்ல காரியத்துக்கு., இந்தப் பணம் உதவுகிறது. மெம்பர்கள் தங்கள் சேமிப்பு என்பதால் கரெக்டாக திரும்ப செலுத்தி விடுகிறார்கள்.

அடுத்த லோன் ரூபாய் 2 லட்சத்துக்காக அப்ளை செய்து உள்ளார்கள். சாங்ஷன் ஆனால்இன்னும் அதிகத்தொகையில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணத்தோடு இருக்கிறார்கள்.

பெண்கள் தங்கள் சுய தேவைகளையும் வீட்டுத்தேவைகளையும் அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் உழைத்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தையும் குழந்தைகளின் செலவுகளையும் கவனித்துக் கொள்வதால் தன்னிறைவான புன்னகையோடு காணப்படுகிறார்கள்..

மாதம் ஒரு முறை ஒரு இடத்தில் கூடி கணக்கு வழக்குகளை பார்க்கிறார்கள். பணம் கட்ட வேண்டியவர்கள் கட்டுகிறார்கள் .

இவர்களை ஒருங்கிணைத்தவர் NGO சரஸ்வதி மேடம் என பெருமையும் சந்தோஷமும் பொங்க சொன்னார் இந்தக் குழுவின் தலைவி பிரியா. கிட்டத்தட்ட 30 குழுக்களின் ஒருங்கிணைப்பளராக இருக்கிறார் சரஸ்வதி. இப்படி ஒருங்கிணைப்பளரின் கண்காணிப்பிலேயே வங்கி உதவிகளும் லோன்களும் வழங்கப் பெறுகின்றன. ”சரஸ்வதி மாமிக்கு இரண்டு பையன்கள். மிக வசதியானவர்கள் எங்களுக்கு உதவி செய்யணும்னு தேவை இல்ல.. ஆனா ஒரு சமூக சேவையா இதை செய்து வர்றாங்க.,” என சந்தோஷமும் நன்றியும் பொங்க சொன்னார் கிரஹலெட்சுமியின் தலைவி பிரியா..

NGO ப்ரோகிராமில் மகளிர் தினத்தன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் மு.க.ஸ்டாலின் கையால் முதல் லோன் வழங்கப்பட்டதாம். இந்தக் குழு தனியாக உருவாகி லோன் அப்ளை செய்துள்ளார்கள். ஆனால் அது ஸ்டாலின் மூலமாக வழங்கப் பட்டது ஆனால் இதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரியா சொன்னார்.

கிரஹலெக்ஷ்மிகள் இன்னும் உயர்ந்து தங்கள் குடும்பத்தையும் உயர்த்த வாழ்த்தி விடைபெற்றோம்..

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 இவள் புதியவள் இதழில் வாழ்க்கை வசப்பட உழைப்பே மூலதனம் என்ற தலைப்பில் கோதை என்ற பெயரில் ( படம் : ஹனி) வெளியாகியுள்ளது.

4 கருத்துகள்:

  1. நம்பிக்கையும், உழைப்புமே - வெற்றியை விரும்புபவர்களுக்கான இரு கண்கள் என்று சொன்ன பதிவு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சுய தொழில் முயற்சியில் முன்னேறும் மகளிர் வாழ்க்கையினை அழகுறப் பதிவு செய்திருகிறீங்க. இவர்களைப் பின்பற்றி ஏனைய மகளிரும் தொழில் வாய்ப்பினைப் பெருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையும்... உழைப்பும் அவர்களின் எதிர்காலத்தை வசந்த காலமாக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி நிருபன் ., ரமேஷ்., குமார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...