எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 மார்ச், 2011

வாழும் வரை போராடு..மணிமேகலை..போராடி ஜெயித்த பெண்கள் ( 5).


"வெறும் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ..” என்ற பாரதியின் வரிகள் மணிமேகலை அவர்களுக்குத்தான் பொருந்தும் .. சாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரியும் இவர் எட்டிய உயரம் டென்சிங் சிகரம்.



திருமதி மணிமேகலை சாஸ்திரி பவனில் பெண் ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலைவர்.. எஸ் சி எஸ்டி பெண் ஊழியர் நலச்சங்கத்தையும் துவக்கியவர்.. ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு பெண்ணால்தான் உணரமுடியும் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல்தான் ஒரு தலித்தின் உணர்வுகளை ஒரு தலித்தால்தான் உணரமுடியும்.. எவ்வளவோ சலுகைகள் கொடுத்தும் ., இன்னும் பின் தங்கி இருப்பவர்களை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு., பாடுபட்டுக் கொண்டிருப்பவர் இவர்.

இவரின் அப்பா தெய்வசிகாமணி ஒரு வழக்கறிஞர்.. இந்திய குடியரசுக் கட்சியின் நிறுவனர்.. முதல் வேட்பாளர்.. எக்மோர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார்.. தாயார் சுசீலா .. KGF ( KOLAR GOLD FIELD) இல் ஸ்கூல் டீச்சர். . அந்தக் காலத்தில் எஸ் எஸ் எல் சி . மியூசிக் டீச்சர்.. நன்கு பாடும் திறமை படைத்தவர்.

நான்கு சகோதரிகள்., ஒரு சகோதரருடன் பிறந்ததால் விட்டுக் கொடுத்தல்., பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நல்ல பண்புகள் வளர்ந்தன.. ஒரே ஒரு ஹரிகேன் விளக்கில் அனைவரும் சுற்றி அமர்ந்து படிப்பது.., பள்ளி ., கல்லூரிகளுக்கு நடந்தே செல்வது ., மேலும் இங்கிலீஷ் மீடியம் ., தமிழ் மீடியம் என மாறி மாறிப் படித்தது என நன்கு படித்து சகோதரிகள். , சகோதரர் அனைவரும் வங்கிப் பணியில்.அமர., இவர் மட்டும் தந்தையின் வாரிசாய்.. சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறார்.

தந்தை தெய்வசிகாமணி அரசியல் மேதை அண்ணல் அம்பேத்காரின் ஃபாலோயர்.. பிள்ளைகளுக்கு நல்ல புத்தகங்களை வாங்கித் தந்து அறிவு ஊட்டி இருக்கிறார்.. 40 வருடங்களுக்கு முன் வெஸ்லி ஹை ஸ்கூலில் படித்தவர் இவர். (WRREN &MARTIN ENGLISH GRAMMAR BOOK )எல்லாம் படிப்பிக்கச் செய்து ஆங்கில அறிவை ஊட்டி இருக்கிறார்.. பிள்ளைகளுக்கு கல்வி ஒன்றுதான் சொத்து.. அதைத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன் .. அதுதான் என் பிள்ளைகளுக்கு நான் வழங்கும் சீதனம் என்று மாப்பிள்ளைகளிடம் கூடக் கூறுவாராம்.

புத்திஸ்ட்டான இவர் குடும்பம் புத்த மத பிரகாரம் பஞ்சசீல நெறிமுறையைப் பின்பற்றி அமைந்தது..

பள்ளிப்பருவம்வரை எல்லார் வாழ்க்கையும் போல் சென்று கொண்டிருந்த இவர் வாழ்க்கை கல்லூரியில் அடி எடுத்து வைத்த போது நடந்த ஒரு சம்பவம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

க்வீன் மேரீஸ் கல்லூரியில் பி ஏ பொருளாதாரம் சேர சென்ற போது தலித் மக்களுக்கு உள்ள அரசு சலுகையை பயன்படுத்தி (ENTITLEMENT CARD ..) E- CARD மூலம் ஃபீஸ் கன்ஷஷன் உண்டு.. அதை செலுத்தி ஒரு சிறிய தொகையும் மாணவியர் செலுத்த வேண்டும்.. அதை செலுத்த கவுண்டரில் காத்திருந்த போது சரியான சில்லரை இல்லை என்று சொன்னதும் வரிசையில் பின் நின்ற ஒருவர்.. ”இவங்க எல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறாங்க”.. என கேட்டாராம்.. அப்போது இவரின் தாய் ., “ ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின் பெயர் என் மகளுக்கு சூட்டி இருக்கிறேன்.. அவள் நிச்சயம் படித்து ஜெயிப்பாள் ., “ எனக் கூறினாராம்.. இதைக் கேட்டவுடன் இவரின் மனதில் பெரும் மாற்றம்.. ஆம் நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம் என ..

அன்றிலிருந்து தன்னைப் போல பணம் கட்ட முடியாமல் கஷ்டப்படும் நண்பர்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஹரிஜன் வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட் மூலமாக E- CARD கிடைக்கச் செய்து ஃபீஸ் கன்சஷன் வாங்கித் தந்திருக்கிறார்.. எஸ் சி., எஸ் டி மக்கள் முன்னேற அரசாங்கம் வழங்கியுள்ள சலுகை இது என கூறி தந்தை தாய் வருமானம் இல்லாமல் இருந்தால்., கம்யூனிட்டி சர்டிஃபிகேட்., பர்த் சர்டிஃபிகேட்., கல்லூரியில் சேரக் கிடைத்த அட்மிஷன் கார்டு எனஅனைத்தையும் சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் காண்பித்தால் அந்த தலைமை அதிகாரி அதை வாங்கி சரி பார்த்துவிட்டு ., ஈ கார்டையும் பார்த்து ஃபீஸ் கன்சஷன் கொடுப்பார்.. ஒவ்வொரு முறையும் இந்த நடைமுறை.. பலமணி நேரம் பொறுமையாக காத்திருந்து பெற வேண்டும். இது போல் உள்ள சலுகைகளை எல்லாம் மற்ற தலித் பிள்ளைகளும் பெற வெண்டும் என்ற சேவை நோக்கில் எல்லாருக்காகவும் பாடுபட்டு இருக்கிறார்..

கல்லூரியில் பி ஏ எகனாமிக்ஸ். அப்புறம் எம் ஏ எகனாமிக்ஸ் படித்தார். த்ரோபால் ப்ளேயர். கல்லூரி யூனியன் லீடர்.. எனவே எல்லா டிபார்ட்மெண்டுக்கும் சென்று எல்லா தலித் மாணவர்களுக்கும் உதவி வாங்கித் தர முடிந்தது.

16 வயதிலேயே இந்த மாதிரி தலித் சமுதாயத்தில் பிறந்ததால் ஏற்பட்ட இன்னல்களை சமாளித்து., வேலைக்கு வந்த பின்னும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தலித் சமூகப் பெண்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்ட (CGWEWA.. CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION ) இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை ( SSWEWA.. SHASTRI BHAVAN SC., ST.,WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION ) உருவாக்கினார்..

CGWEWA வைப் பொறுத்தவரை ஹெல்த் கேர் நிறைய எடுக்கப் பட்டிருக்கு.. இதுக்கு இந்த சங்கத்தின் தலைவியாய் இருப்பதால் மற்றவர்களின் ஒத்துழைப்போடு தான் நிறைய சாதிக்க முடிந்தது எனக் கூறுகிறார்.. வெறும் 5 ரூபாய் செலவில் அனைத்துப் பெண்களுக்கும் BMD- BONE MASS DENSITY TEST செய்து ( மெஷினின் விலை 12 லட்சம் ) ANENE COMPANY யின் உதவியோடு முட்டி எலும்புத் தேய்மானம் கண்டுபிடித்து கால்சியம் மாத்திரைகள் வழங்கப் பட்டிருக்கு.

பெண்கள் பொதுவா வீட்டில் எல்லாரையும் கவனிப்பங்க ,. தன்னை மட்டும் கவனிச்சுக்க மாட்டாங்க. அதைப் போக்க இந்த மாதிரி இலவச மருத்துவ முகாம்களை நிறைய நடத்தி கண் பல்., டயபடிக்., கைனகாலஜிஸ்ட்., ஜெனரல் செக்கப் எல்லாம் ரெகுலரா செய்றாங்க.

மார்ச் 8 மகளிர் தினத்தன்று சாதித்த பெண் நினைவா அவார்டு வழங்கப்படுது இந்த வருடம் மதர் தெரசா அவார்டு இளவழகிக்கு வழங்கப் பட்டது. டாக்டர் ஷாலினியை வைத்து பணிபுரியும் பெண்களுக்கு மன அழுத்தம் குறைய ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர் கலா (கைனகாலஜிஸ்ட்) மூலம் ப்ரொஜக்டர்கள் வைத்து யூராலஜிஸ்ட் மூலம் கர்ப்பபை பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினத்தன்று 10 நாட்கள் TALENT PROMOTING COMPETTTIONS மற்றும் CULTURALS நடத்தப்பட்டு திறமைகள் வெளிக்கொணரப்படுது.. இதுஅவங்க திறமைகள் வெளிப்படும் ஒரு ப்ளாட்ஃபார்மா அமையுது. அவர்களின் அழகு .,திறமை ., ஆளுமைத்தன்மை கணக்கில் கொள்ளப்பட்டு மிசஸ் . சாஸ்த்ரி பவனாக முடி சூட்டப்படுறாங்க..

எஸ் சி,., எஸ் டி விமன்ஸ் அசோசியேஷன் பெண்கள் பிரச்சனைகள்., தனிப்பட்ட முறையில் ஜாதிப் பிரச்சனைகள்., இன்னும் பல .... இவற்றை விமன்ஸ் கமிஷன் மூலம் தீர்த்து வைக்கிறாங்க... இந்த அசோசியேஷன் செயல் பட ஆரம்பித்த பிறகு இந்த தொந்தரவுகள் குறைந்து இருக்கு.. முன்பு தலித் பெண்கள் அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சொல்ல பயந்தார்கள்.. இப்போ தைரியமா சொல்ல ஆரம்பித்ததால் இது விமன்ஸ் அசோசியேஷன் கூட மிங்கிள் ஆகி இருப்பதால் ஒரு பயம் இருக்கு.. எனவே தவறுகள் குறைந்து விட்டன.

தனியே பெண்கள் போராடுவதை விட ஒரு இயக்கத்தின் மூலமா சொல்லப் படும் போதும்., செயல்படும் போதும் அதன் வீர்யமும் வலிமையும் கூடுது. அதிகாரத்தின் மூலமும்., இயக்கத்தின் மூலமும் ரூல்ஸ் மற்றும் ரெகுலேஷன்ஸ் மூலமும் அதிகம் செய்ய முடியுது. மரியாதையும் அதிகம் . பொறுப்பும் அதிகம். சாதிக்கவும் முடியுது. பெண்கள் எவ்வளவு சாதிக்க முடிந்தாலும் அதில் சில தங்கு தடைகளை ஏற்படுத்துவது ஆண்கள்தான். அதையும் தாண்டி இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலையை வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்... அதற்கு இந்த அமைப்பு பெரும் துணையா இருக்கு.. இவை எல்லாத்தையும் சாதித்த மணிமேகலை நானொரு தலித் பெண் என்று சொல்ல பெருமைப்படுகிறேன் என்றும் மிக தன்னடக்கமாகவும்., , எல்லாவற்றுக்கும் இயக்கத்தினைக் கை காட்டுகிறார்..

இப்படி ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் இருந்தால் போதும் .என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு விடிவெள்ளிதான்.


மணிமேகலையை என் தோழியாக இணைத்த அன்புத் தங்கை கீதா இளங்ககோவனுக்கு நன்றி..:)

17 கருத்துகள்:

  1. உங்கள் அனைவுருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. இளங்கோவன் பாலகிருஷ்ணன்.19 மார்ச், 2011 அன்று AM 10:28

    சமுகத்தின் பல்வேறு தளங்களில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து சத்தமின்றி சாதித்துவரும் சங்கதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது எழுத்துக்கான அரும்பணியாகும். இம்முயற்சி போராளிகளை ஊக்குவிப்பதோடு அடுத்தடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கும் வாய்ப்பாய் அமையும்...தெளிந்த நீரோட்டம் போல அருமையாக எழுதியுள்ளீர்கள்...தங்கள் பணி சிறக்கட்டும் :)

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தேனக்கா பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தேனக்கா பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. போராடி வெற்றி கொண்ட மணிமேகலை
    அவர்களுக்கும், அவர்களை எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் மிக்க நன்றி
    தேனக்கா.

    பதிலளிநீக்கு
  6. உங்க எல்லோருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  7. பகிர்வுக்கு நன்றி தேனம்மை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாசிக்கும்போது மனதில் உற்சாகம் உத்வேகம்.ஏதாவது நல்லது செய்தே சாகவேணும் !

    பதிலளிநீக்கு
  9. நன்றி கருன்

    நன்றி இளங்கோ


    நன்றி மாதவி

    நன்றி அருணா

    நன்றி ஆசியா

    நன்றி புவனா

    நன்றி ராஜி

    நன்றி மனோ

    நன்றி ஸாதிகா

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  10. புரட்சிப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. மணிமேகலை அவர்களின் பாதை சாதிக்கத் தூண்டும் அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டு. நல்ல பகிர்வு. நன்றி! அது சரி .. எல்லோரையும் நெட்வொர்க் செய்துவிட்டு அமைதியாக ஓரத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த கீதா இளங்கோவன் பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஸ்ரீராம்., ராமலெக்ஷ்மி., சிவகுமாரன்., சொல்லச் சொல்ல..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...