ஃபீனிக்ஸ் பறவை பார்த்து இருக்கிறீர்களா..? தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டும் என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்... இரும்பு மனுஷி., மலை அரக்கி என்றெல்லாம் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் ரம்யா என்றைக்கும் சந்தோஷப் பந்து..
இன்றைக்கு ஒரு சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில்., சாஃப்ட்வேர் டிவிஷனில் ப்ராஜெக்ட் மானேஜராக இருக்கிறார். இதன் பின்னே நெடிய உழைப்பு இருக்கிறது. அசாதாரணமான உழைப்பு. பெண்கள் முன்னேற்றம் என்பது இப்போதும் கடினமாக இருக்கக் கூடிய சூழலில் தன் உபாதைகளையும் மீறி மீண்டெழுந்து புதிய பரிமாணங்களில் பரிணமிக்கிறார்.
அவருக்குப் பதி்மூன்று வயதாயிருக்கும்போது ஏற்பட்ட ஒரு நெருப்புக் காயம் கிட்டத்தட்ட 42 ப்ளாஸ்டிக் சர்ஜரிகளுக்குப் பிறகு சரியாகி இருக்கிறது. இளமை தொடங்கும் வயது . பெண்மையின் ஆர்வமும் ஆசைகளும் துளிர் விடத் தொடங்கும் பருவம். எல்லாம் முடிந்துவிட்டது எனச் சோர்ந்துபோய்விடாமல்., முடங்கிப் போய்விடாமல்., போராடி ஜெயித்து தன்னை மீட்டுக் கொண்ட பெண் இவர்.
முதல் பதினைந்து சர்ஜரிகளும் உயிர் காக்க செய்த சர்ஜரிகள். ”லைஃப் சேவிங்...” மிச்சமெல்லாம் அதன் தொடர் சிகிச்சைகள். கடைசி சிகிச்சை கடந்த டிசம்பரில்தான் முடிந்திருக்கிறது. UG., PG., M.C.A., படித்து இருக்கிறார். மிகச் சிறந்த ஐக்யூ உள்ள குழந்தையாய் இருந்ததால் இரண்டு முறை பள்ளியில் டபிள் ப்ரமோஷன் கிடைத்து இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்கும்., டென்த்திலிருந்து ப்ளஸ் டூவிற்கும். யூஜி முடித்தபின் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்தும் இருக்கிறார்.
ப்ளாஸ்டிக் சர்ஜரிகளும் மற்ற செலவும் ஹாஸ்டலில் தங்கி தன் சம்பாத்தியத்திலேயே செய்து கொண்டிருக்கிறார். ஹாஸ்டலில் இவருக்கு கிடைத்த அற்புத நட்பு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் செல்வி என்ற காயத்ரி. சில நல்ல நட்புக்கள் வாழ்வு முழுமைக்கும் தொடரும் உறவுகளாய் இருப்பது உண்மை.. இவருக்கான சிகிச்சை செலவு எல்லாம் இவரின் அத்யந்தத் தோழி தன் சம்பாத்தியத்திலும் செய்து இருக்கிறார். சிறு வயதில் நம்முள் உண்டாகும் நல்ல குணங்கள் என்றென்றும் எந்த சூழ்நிலையிலும் நம்முடன்தான் இருக்கும். சிறு வயதிலேயே பக்கத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவுவது இவருக்கு மிகப் பிடித்தமான ஒன்று. அது இன்றும் தொடர்கிறது. அது எத்தகைய இன்பமயமானது என்பதை இவரின் எழுத்துக்களில் படிக்கும்போது உணரமுடிகிறது.
இவரின் தோழியும் இவரும் இவர்களின் தாயார்களுடன் ஒன்றாக வசித்துப் பின் இவர்களின் தாயார்களின் காலத்துக்குப் பிறகும் தொடர்ந்து நிறைய சேவை செய்து வருகிறார்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுவது., இளம் வயதில் வாழ்வைத் தொலைத்த பெண்களுடன் பேசி பெற்றோருடன் சேர்த்து வைப்பது., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுப் பிறக்கும் கைக்குழந்தைகளுக்கு சேவை செய்வது., என நீளுகிறது இவரின் சேவைப் பட்டியல்.. மிக முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதால் கேள்விக்குறியான எதிர்காலத்தோடு இருப்பவர்களை எல்லாம் ஆச்சர்யக்குறியாக்கும் முயற்சியில் சில மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்து தனது சம்பாத்தியத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தைச் செலவழித்து தனது நேரடி கண்காணிப்பிலேயே படிக்க வைக்கிறார்கள். ஹைதையில் பிறந்து புதுகையில் பள்ளிப் படிப்பு ., சென்னையில் கல்லூரி படிப்பு முடித்து தற்போது நல்ல பணியில் இருக்கும் ரம்யா வாழ்க்கையைத் தொலைத்த ., வாழ்வில் ஏமாந்த ., வாழ்க்கையை வாழ பயப்படும் ஒரு பிரிவிற்காக (பெண்களுக்காக) வலைத்தளத்திலும் எழுதி வருகிறார். மிகத் தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள். இன்னும் முதியோர்கள்., ஆதரவு அற்றவர்கள்., குழந்தைகள் எல்லாருக்கும் ஒரே இடத்தில் ஷெல்டர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இயன்றவர்களின் உதவியையும் ஏற்றுக் கொள்கிறார். நல்லபடி எல்லாம் அமைந்து இவரின் சேவைகள் பலருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
email:- ramya3122@gmail.com
ph:- 99419 13286.
டிஸ்கி:- ரம்யா பற்றிய என்னுடைய இந்தக் கட்டுரை அக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவந்துள்ளது .
ரம்ஸ் ஐ லவ் யூ.. கலை அக்கா இல்லை அம்மா :)
பதிலளிநீக்குரம்யா & அக்காவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். !!
பதிலளிநீக்குரம்யா + செல்வி அக்கா
பதிலளிநீக்குஇவர்களின் உதவி எனும் மழையில் நினைந்தவர்களில் நானும் ஒருவன்
நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது
RAMYA MY DEAR I LOVE U DA..
பதிலளிநீக்குஎன்னதான் வாய் கிழிய பேசினாலும் எல்லோருக்கும் இந்த மனது வந்து விடாது , இவர்கள் ஆறாவது அறிவுக்கும் அப்பாற்பட்ட மனிதர்கள்
பதிலளிநீக்குதேனம்மை அருமை .மிகவும் பெருமையாக உள்ளது .
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி .
வாழ்த்துக்கள் ரம்யா
ரம்யாவுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நல்ல பதிவு.
பதிலளிநீக்குரம்யா அக்காவிற்கு வாழ்த்துக்கள், இவரை போன்ற நல்ல உள்ளகங்களை கண்டறிந்து தெரிவிக்கும் தேனக்காவிர்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குரொம்ப நெகிழ்வாக உள்ளது தேனக்கா.. தன்னம்பிக்கையுடன் வெற்றிநடை போடும் ரம்யா அம்மா போல இன்னும் பல பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். ரம்யாம்மாவை பற்றி அறிய தந்ததுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குரம்யா அக்கா ஐ லவ் யூ....நீங்கள் எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணம்...நானும் உங்களை பின்பற்றுகிறேன்..
பதிலளிநீக்குரம்யா அக்கா ஐ லவ் யூ....நீங்கள் எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணம்...நானும் உங்களை பின்பற்றுகிறேன்..
பதிலளிநீக்குரம்யா அக்கா ஐ லவ் யூ....நீங்கள் எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணம்...நானும் உங்களை பின்பற்றுகிறேன்..
பதிலளிநீக்குரம்யா அக்கா தன்னம்பிக்கையின் உதாரணப் பெண்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறுகிறார். வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குபாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குரம்யா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ரம்யா
பதிலளிநீக்குஇவரது மனோ வலிமை பாராட்டத்தக்கது...............மேலும் பல் லாண்டுகள் வாழ்ந்து இவர் சேவையா ற்ற வேண்டும்.
பதிலளிநீக்குcongrats to ramy akka & selvi akka!!
பதிலளிநீக்குரம்யாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்...!
பதிலளிநீக்குகட்டுரை தந்த உங்களுக்கும் நன்றி!
பகிர்வுக்கு பாராட்டுக்கள் தேனக்கா,ரம்யா அக்கா & செல்வி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇரும்பு மனுஷி ரம்யா அன்னைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிறந்த உதாரணப் பெண்மணி ரம்யா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ரம்யா.
நன்றி தேனம்மை.
வாழ்த்துக்கள்.சகோதரி ரம்யாவைப்பற்றி ஊடகங்களின் மூலமாக நிறைய அறிந்திருக்கின்றேன்.
பதிலளிநீக்குNice post abt a nice person Thenammai.
பதிலளிநீக்குself confidence = Ramya :-))
பதிலளிநீக்குவாழ்த்துகள் ரம்யா. நன்றி தேனம்மை.
பதிலளிநீக்குநன்றி விஜி., கவிதா., ஜமால்., தமிழரசி., மங்குனி அமைச்சர்., பத்மா., ஸ்ரீராம்., சசி., ஸ்டார்ஜன்., மஹா., ஹுசனம்மா., வெறும் பய., குமார்., ரவி., நசர்., நிலாமதி., மேனகா., ஜோதி பாரதி.,ஆசியா., கோபால்., ராமலெக்ஷ்மி., ஸாதிகா., முனியப்பன் சார்., கார்த்திக்., சூர்யா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு