எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

மனைவி

எந்நேரம் வந்தாலும்
எனக்காக கதவடியில்
காத்திருந்திருப்பாய்..

அதீதப்பேச்சால்
அயர வைத்தது போல்
அன்பாலும்...

பணிக்கான ஓட்டத்தில்
ஊர் விட்டு ஊர் ஓட
என்னுடனே துணை வருவாய்...

தனியாக நான் சென்றால்
என்னுடன் உன் இதயத்தையும்
இறைநம்பிக்கையையும்
என் துணையாய்
அனுப்பி வைப்பாய்...

என் நோவு கண்டால்
ஊர்ச்சாமி ஒன்றுவிடாமல்
பேர் சொல்லி கூப்பிட்டு
உளம்நடுங்க வேண்டி நிற்பாய்...

வகைவகையாய் உணவிட்டு
வந்த விருந்தோம்பி
வரும்விருந்துமோம்பி நிற்பாய்...

குழந்தைகளை படிப்போடும்
பண்போடும் வளர்த்திட்டாய்...

எப்போதும் சேர்ந்து இருக்க
முடியாமல் உன் பேச்சும்
பிரிந்து செல்ல இயலாமல்
உன் நேசமும் எனை அடிக்கும்
அளவுக்கதிகமாய்...

என்றாலும் எனக்கிங்கு
உன் போல ஒருவர் ஏது?
உனைவிட்டு இருந்தாலும்
உன்னுள்ளே நான் இருப்பேன்...!!!

6 கருத்துகள்:

  1. அதானே ...கவிதை நல்லா இருக்கு... கற்பனை தானே ??????

    பதிலளிநீக்கு
  2. அது ஒரு கனாக்காலம் சுந்தர் ஜீ
    நீங்களுமா??
    இது மனைவிகளின் மனம் சார்ந்த விஷயம்...
    அது உங்களாலும் முனியப்பன் ஸாராலும்
    உணர்ந்து கொள்ளப்பட்ட ஒன்றுதான் ....
    தமிழ் கலாசார பாதுகாவலர்கள்
    வருவது தெரிகிறதா...

    பதிலளிநீக்கு
  3. ITS ALL ABT LOVIN UR WIFE---Thanx to Karan Johar [Coffee with karan--in Star world with
    Rishi kapoor and Neethu singh.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...